Photo Credit: Weibo
iQoo-ன் Neo சீரிஸில் அடுத்த போனாக, iQoo Neo 3 5G ஏப்ரல் 23-ஆம் தேதி அறிமுகமாகும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. முந்தைய iQoo 3 ஸ்மார்ட்போன்களைப் போலவே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC, 5G மற்றும் UFS 3.1 ஸ்டோரேஜை கொண்டிருக்கும். புதிய iQoo Neo 3 5G போன் 144Hz டிஸ்பிளேவுடன் வருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. iQoo Neo 3 5G போனில் 4G வேரியண்ட்டும் இருக்கக்கூடும்.
வெய்போவில் புதிய அறிவிப்பு, iQoo போனில் புதிய 3 + 2 யுக்தியை இணைத்துள்ளதாக கூறுகிறது. இதில் '3' என்பது ஸ்மார்ட்ஃபோனின் பிராசசர், டிஸ்பிளே புதுப்பிப்பு வீதம் மற்றும் ஸ்டோரேஜ் ஆகும். '2' என்பது 44W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்பஷனுடன் 4,500 எம்ஏஎச் பேட்டரி என்று டிப்ஸ்டர் கூறுகிறது.
வரவிருக்கும் iQoo Neo 3 5G-யிலும் 48 மெகாபிக்சல் பிரதான பின்புற கேமரா இருக்கும் என்று மற்றொரு அறிக்கை கூறியது. இந்த போனுக்கான ஒரு மைக்ரோசைட்டையும் விவோ அறிமுகப்படுத்தியுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்