iQOO நிறுவனத்தின் புதிய iQOO Neo 11 மாடல் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
Photo Credit: iQOO
QOO Neo 11, Android 16 அடிப்படையிலான OriginOS 6 உடன் வருகிறது.
கேமிங் போன்களுக்கு பெயர் போன iQOO பிராண்டோட புது ரிலீஸ் இப்போ சீனாவில் iQOO Neo 11 மாடல் சும்மா மிரட்டலா லான்ச் ஆயிருக்கு. இந்த போன்ல என்னென்ன இருக்குனு கேட்டா, ஆச்சரியப்படுவீங்க. ஏன்னா, இதுல இருக்குற பேட்டரி கெப்பாசிட்டிதான் இப்போ மார்க்கெட்ல ஹைலைட்டா பேசப்படுது. வாங்க, விஷயத்துக்கு வருவோம். இந்த iQOO Neo 11 போன்ல இருக்குற முக்கியமான சிறப்பம்சங்களைப் பார்க்கலாம்.
பொதுவா ஃபிளாக்ஷிப் போன்கள்ல 5,000mAh பேட்டரி இருக்கும். ஆனா, இந்த iQOO Neo 11 மாடல்ல 7,500mAh கெப்பாசிட்டி கொண்ட மெகா பேட்டரி கொடுத்திருக்காங்க. அப்போ, ஃபோன் ஒரு நாள் இல்ல, ரெண்டு நாள் கூட தாங்கும்னு எதிர்பார்க்கலாம்! அதுவும் இல்லாம, இந்த பெரிய பேட்டரியை சார்ஜ் பண்ண 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுத்திருக்காங்க. பேட்டரியைப் பத்தி கவலையே படாதீங்க!
இந்த போனின் பவரைப் பார்த்தீங்கன்னா, அதுக்கு உயிரே Snapdragon 8 Elite சிப்செட்-தான். போன வருஷத்தோட டாப்-எண்ட் சிப்செட் இது. இதுமட்டுமல்லாம, கேமர்ஸ்-க்குனே தனியா iQOO Q2 chip-ம், Monster super-core engine-ம் சேர்த்து
கொடுத்திருக்காங்க. இதனால, நீங்க பெரிய கேம்ஸ் விளையாடினாலும் போன் ஸ்லோ ஆகாது. அப்புறம், அதிக வெப்பத்தை (Heating) கட்டுப்படுத்த 8K vapour chamber கூலிங் சிஸ்டமும் இருக்கு. AnTuTu பென்ச்மார்க்கில் இந்த போன் 3.54 மில்லியன் பாயிண்ட்ஸ் எடுத்திருக்குன்னா, பர்ஃபார்மன்ஸ் சும்மா தெறிக்கும்னு நம்பலாம். இதுல அதிகபட்சமா 16GB LPDDR5x RAM மற்றும் 1TB UFS 4.1 ஸ்டோரேஜ் ஆப்ஷனும் கிடைக்குது.
டிஸ்ப்ளே-ஐப் பார்த்தா, அது ஒரு 6.82-இன்ச் அளவுள்ள 2K (QHD+) LTPO AMOLED டிஸ்ப்ளே. ரெசல்யூஷன் பயங்கரமா இருக்கும். அதுவும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் இருக்கறதுனால, ஸ்க்ரோலிங் பண்றது, கேமிங் விளையாடுறது எல்லாமே ரொம்ப ஸ்மூத்தா இருக்கும். டச் சென்சிட்டிவிட்டியும் (Touch Sampling Rate) 3,200Hz கொடுத்திருக்காங்க.
கேமராவுக்குன்னு பார்த்தா, பின்னாடி இரண்டு லென்ஸ் கொடுத்திருக்காங்க. மெயின் கேமரா 50MP சென்சார், அதுல OIS (ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன்) சப்போர்ட் இருக்கு. அதோட ஒரு 8MP அல்ட்ராவைடு லென்ஸும் இருக்கு. முன்னாடி செல்ஃபி எடுக்கிறதுக்கு 16MP கேமரா கொடுத்திருக்காங்க.
சீனாவில் இந்த போனோட ஆரம்ப விலை (12GB RAM + 256GB ஸ்டோரேஜ்) இந்திய மதிப்பில் சுமார் ரூ. 32,500-ல இருந்து தொடங்குது. இதுல IP68 மற்றும் IP69 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் ரேட்டிங் இருக்கு. மொத்தத்தில், iQOO Neo 11 ஒரு கம்ப்ளீட் கேமிங் மற்றும் பேட்டரி பவர்ஹவுஸ் மாடலா வந்திருக்கு. இந்தியாவிற்கு இந்த போன் எப்போ வரும்னு கம்பெனி இன்னும் சொல்லல, ஆனா சீக்கிரமே வரும்னு எதிர்பார்க்கலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Arc Raiders Hits Over 300,000 Concurrent Players on Steam After Launch
Oppo Reno 15 Series India Launch Timeline Leaked; Reno 15 Mini Also Expected to Debut