iQOO Neo 11 ஸ்மார்ட்போனில் Snapdragon 8 Elite சிப்செட் மற்றும் 8K VC கூலிங் சிஸ்டம் இருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது
Photo Credit: iQOO
iQOO Neo 11: Snapdragon 8 Elite, 2K 144Hz, 7500mAh பேட்டரி
iQOO நிறுவனத்தின் அடுத்த கேமிங் மாஸ்டர் பீஸான iQOO Neo 11 பத்தின முக்கியமான டீடெய்ல்ஸ் அதிகாரப்பூர்வமா வெளியாகி இருக்கு. ஃபோன் லான்ச் ஆவதற்கு முன்னாடியே, இதுல கொடுத்திருக்க ப்ராசஸர் மற்றும் கூலிங் சிஸ்டம் எல்லாத்தையும் கம்பெனியே கன்ஃபார்ம் பண்ணிருக்காங்க. வாங்க, என்னென்னனு பாக்கலாம். இந்த iQOO Neo 11-அ பத்தி பேசும்போதே, முதல் விஷயம், இதோட ப்ராசஸர் தான். இதுல Qualcomm-ஓட ஃபிளாக்ஷிப் சிப்செட்டான Snapdragon 8 Elite SoC கொடுத்திருக்காங்க. போன வருஷத்தோட டாப்-எண்ட் சிப்செட் இது. இது LPDDR5X Ultra RAM (9600Mbps வேகத்துடன்) மற்றும் UFS 4.1 ஸ்டோரேஜ்-ஓட இணைஞ்சு வருது. இந்த காம்பினேஷனால, மல்டி டாஸ்கிங் மற்றும் கேமிங் பெர்ஃபாமன்ஸ் வேற லெவல்ல இருக்கும். கம்பெனி வெளியிட்ட டீஸர் படி, இந்த போன் 3.54 மில்லியன்-க்கும் அதிகமான AnTuTu ஸ்கோரை எடுத்து, ஒரு ரெக்கார்ட் செஞ்சிருக்கு.
கேமிங் ஃபோன்ல நமக்கு இருக்கற பெரிய கவலை என்னன்னா, கொஞ்ச நேரத்துலயே போன் சூடாயிடுறதுதான். ஆனா, iQOO Neo 11-ல அந்த கவலையே இல்லை. ஏன்னா, இதுல 8K VC கூலிங் சொல்யூஷன் கொடுத்திருக்காங்க. '8K' கூலிங்கா? ஆமாம்! இந்த அட்வான்ஸ்டு வேப்போர் சேம்பர் (Vapour Chamber) கூலிங் சிஸ்டம், வெறும் 10 வினாடிகளில் போனோட வெப்பநிலையை 15 டிகிரி செல்சியஸ் வரைக்கும் குறைக்க முடியும்னு iQOO சொல்றாங்க. அதுமட்டுமில்லாம, iQOO 15-ல பாத்த மாதிரி, கேமிங்கிற்காகவே பிரத்யேகமான 'Monster Supercore Engine' டெக்னாலஜியும் இதுல இருக்கு. இது ஃப்ரேம் ரேட்டை நிலையாக வைக்க உதவுமாம்.
கேமிங்ன்னா டிஸ்பிளே தரமா இருக்கணும்ல? இந்த ஃபோன்ல BOE நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட 2K ரெசல்யூஷன் LTPO AMOLED டிஸ்பிளே இருக்கும்னு எதிர்பார்க்கப்படுது. இது 144Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட்-ஓட வருது. 3,200Hz டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் 25.4ms ரெஸ்பான்ஸ் டைம்னு, கேமிங்கிற்கு ரொம்பவே ஃபாஸ்ட்டான டச் ரெஸ்பான்ஸை இது கொடுக்கும். பேட்டரியைப் பொறுத்தவரை, ஒரு பெரிய அப்கிரேடா 7,500mAh பேட்டரி மற்றும் 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் இருக்கும்னு தகவல் இருக்கு. ஒரு கேமிங் ஃபோனுக்கு இது ஒரு அருமையான பேட்டரி சைஸ்.
iQOO Neo 11 வருகிற அக்டோபர் 30-ம் தேதி சீனாவில் லான்ச் ஆகிறது. இது Android 16 அடிப்படையிலான OriginOS 6-ல் இயங்கும். இதன் ஆரம்ப விலை சுமார் ₹34,990-க்குள்ள இருக்கலாம்னு எதிர்பார்க்கப்படுது. இது கருப்பு (Black) மற்றும் சில்வர் (Silver) நிற ஆப்ஷன்களில் வரலாம். கேமராவைப் பொறுத்தவரை, OIS உடன் கூடிய 50MP பிரைமரி கேமராவும், கூடவே அல்ட்ரா-வைட் சென்சாரும் இருக்கலாம். இந்த iQOO Neo 11-ஓட அம்சங்கள் எல்லாம் பார்த்தா, கண்டிப்பா இது ஒரு 'ஃபிளாக்ஷிப் கில்லர்' கேமிங் ஃபோனா இருக்கும்னு நம்பலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Night Swim Streaming Now On JioHotstar: Everything You Need To Know About This Supernatural Horror
Apple's App Store Awards 2025 Finalists Include BandLab, HBO Max, Detail and More