பச்சை, ஆரஞ்சு மண்டலத்தில் பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வந்தது iQoo 3!

பச்சை, ஆரஞ்சு மண்டலத்தில் பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வந்தது iQoo 3!

Photo Credit: Twitter/ iQoo India

iQoo 3-யின் கேமரா மேல்-வலது மூலையில் வைக்கப்பட்டுள்ள ஹோல்-பஞ்ச் வடிவமைப்பைக் கொண்டுள்ளது

ஹைலைட்ஸ்
  • iQoo 3-யின் விற்பனை பிளிப்கார்ட்டில் தொடங்கியது
  • iQoo ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலத்தில் மட்டுமே வழங்கப்படும்
  • சிவப்பு மண்டலத்தில் கட்டுப்பாடுகள் இன்னும் நடைமுறையில் உள்ளன
விளம்பரம்

கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு iQoo சமீபத்தில் அதன் iQoo 3-yiன் விலையை மாற்றியது. அதேசமயம், இப்போது இந்த போனின் விற்பனை இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் மூலம் தொடங்கியது. இருப்பினும் தற்போது பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலத்தில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பின் கோடுகளில் மட்டுமே விநியோகம் செய்யப்படுகிறது.

சமீபத்தில், வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை பச்சை, ஆரஞ்சு மற்றும் சிவப்பு மண்டலங்களாக இந்திய அரசு பிரித்துள்ளது. சிவப்பு மண்டலத்தில் கட்டுப்பாடுகள் இன்னும் நடைமுறையில் இருக்கும்போது, ​​பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களுக்கு ஓரளவு தளர்வு கிடைத்துள்ளது. இப்போது பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலத்தின் கீழ் வரும் பகுதிகளில் அத்தியாவசியமற்ற பொருட்களின் விநியோகம் தொடங்கி பின்னர், ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் தங்கள் ஸ்மார்ட்போன் விற்பனையை அறிவிக்கின்றனர்.

AmazonFlipkart போன்ற இ-காமர்ஸ் தளங்களில் ஸ்மார்ட்போன்கள், டிவிகள், மடிக்கணினிகள் போன்ற அத்தியாவசியமற்ற பொருட்களுக்கான ஆர்டர்களை தொடங்கலாம் என்று உள்துறை அமைச்சகம் (MHA) சமீபத்தில் அறிவித்தது. இருப்பினும், பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களுக்கு மட்டுமே.

போனின் விலை:

iQoo தனது சமீபத்திய போனான iQoo 3, இன்று முதல் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது என்று ட்விட்டர் வழியாக அறிவித்துள்ளது. இருப்பினும், இந்த அம்சம் பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

iQoo 3-யின் விலை சமீபத்தில் குறைக்கப்பட்டது. குறைக்கப்பட்ட பின்னர், போனின் 8GB + 128GB மாடலின் விலை ரூ.34,990-யாக உயர்ந்துள்ளது. இதன் 8 ஜிபி + 256 ஜிபி வேரியண்டின் விலை ரூ.37,990 மற்றும் 12 ஜிபி + 256 ஜிபி வேரியண்ட் விலை ரூ.44,990 ஆகும். 

போனின் விவரங்கள்:

iQoo 3 போனில் 6.44 இன்ச் முழு எச்டி + (1080 x 2400 பிக்சல்கள்) எச்டிஆர் 10+ சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளே உள்ளது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 செயலி மற்றும் 12 ஜிபி எல்பிடிடிஆர் 5 ரேம் கொண்டுள்ளது. 

iQoo 3 குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும். இதில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 13 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, 13 மெகாபிக்சல் மூன்றாவது கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் நான்காவது கேமரா இருக்கும். இந்த ஸ்மார்ட்போனில் 55W சூப்பர் ஃபிளாஷ் சார்ஜ் உதவியுடன் 4,440 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. 

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Powerful processor
  • 5G ready (top-end variant only)
  • Stunning display
  • Fast charging
  • Shoulder buttons for gaming
  • Bad
  • Camera performance needs improvement
  • Preinstalled bloatware
Display 6.44-inch
Processor Qualcomm Snapdragon 865
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 13-megapixel + 13-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4440mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: iQoo, iQoo 3, Flipkart, iQoo 3 specifications, iQoo 3 Price in India
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »