மிகவும் எதிர்பார்க்கப்பட்ட iQoo 3 இறுதியாக இன்று வெளியானது. பெரிதும் சந்தைப்படுத்தப்பட்ட முதன்மை 5ஜி போன் மொபைல் கேமிங் ஆர்வலர்களை இலக்காகக் கொண்டுள்ளது. இந்த போன் Quantum Silver, Volcano Orange மற்றும் Tornado Black கலர் ஆப்ஷன்களில் வருகிறது.
iQoo 3, 4G மற்றும் 5G வேரியண்டுகளில் வருகிறது, 5G ஆதரவு போனின் டாப்-எண்ட் ஸ்டோரேஜுக்கு மட்டுமே. விலை நிர்ணயம் செய்யும்போது, iQoo 3's 4G-ஒன்லி 8GB + 128GB வேரியண்டின் விலை ரூ.36,990 ஆகும், அதன் 4G-ஒன்லி 8 ஜிபி + 256 ஜிபி மாடல் ரூ.39,990 விலைக் குறியிட்டைக் கொண்டுள்ளது. 5 ஜி ஆதரவுடன் வரும் iQoo 3-யின் டாப்-எண்ட் 12 ஜிபி + 256 ஜிபி மாடலின் விலை ரூ.44,990-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது Quantum Silver, Volcano Orange மற்றும் Tornado Black கலர் ஆப்ஷன்களில் வருகிறது. இது மார்ச் 4 மதியம் 12 மணிக்கு முதல் பிளிப்கார்ட் மற்றும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ iQoo.com வலைத்தளம் வழியாக இந்தியாவில் விற்பனைக்கு வரும்.
IQoo 3-யின் வெளியீட்டு சலுகைகளில் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் ரூ.3,000 கேஷ்பேக், no-cost EMI மற்றும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.12,000 மதிப்புள்ள பலன்கள் ஆகியவை அடங்கும்.
டூயல்-சிம் (நானோ) iQoo 3, iQoo UI 1.0 உடன் ஆண்ட்ராய்டு 10 -ல் இயக்குகிறது. இது, 6.44-இன்ச் முழு-எச்டி + (1080 x 2400 பிக்சல்கள்) எச்டிஆர் 10+ சூப்பர் அமோலேட் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது 409ppi பிக்சல் அடர்த்தி கொண்டது. இந்த போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC-யால் இயக்கப்படுகிறது, இது 12 ஜிபி வரை LPDDR5 ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
iQoo 3 ஒரு குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இது, f/1.79 aperture மற்றும் சோனி IMX582 சென்சாருடன் 48 மெகாபிக்சல் பிரதான கேமராவைக் கொண்டுள்ளது. இதற்கு, f/2.46 aperture மற்றும் 20x டிஜிட்டல் ஜூம் வெளியீட்டுடன் 13 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸ் உதவுகிறது. f/2.2 aperture மற்றும் 120 டிகிரி பார்வை கொண்ட 13 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் ஸ்னாப்பரும், பொக்கே ஷாட்ஸ்களுக்கு f/2.4 aperture உடன் 2 மெகாபிக்சல் portrait கேமராவும் உள்ளன. முன்புறத்தில், ஒரு f/2.45 aperture மற்றும் 4K வீடியோ பிடிப்புக்கான ஆதரவுடன் 16 மெகாபிக்சல் செல்பி ஸ்னாப்பர் உள்ளது, இது hole-punch-ல் வைக்கப்பட்டுள்ளது.
iQoo 3-யானது 256 ஜிபி வரை உள் UFS 3.1 ஸ்டோரேஜை வழங்குகிறது. iQoo 3-யின் இணைப்பு விருப்பங்களில் 5G, 4G, Bluetooth 5.1, USB Type-C 2.0, GPS மற்றும் Glonass ஆகியவை அடங்கும். இது தனியுரிம 55W சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்திற்கான ஆதரவுடன் 4,440 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. iQoo, 158.51 x 74.88 x 9.16 மிமீ அளவு மற்றும் 214.5 கிராம் எடையை வழங்குகிறது. அங்கீகாரத்திற்காக இன்-டிஸ்பிளே கைரேகை உணர்திறன் தொகுதி உள்ளது, அதே நேரத்தில் iQoo 3-யில் உள்ள சென்சார்களில் accelerometer, ambient light sensor, compass, gyroscope மற்றும் proximity சென்சார் ஆகியவை அடங்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்