Photo Credit: Twitter/ Gagan Arora
இந்தியாவில் iQoo 3-யின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் iQoo 3-ன் விலையை திருத்தியுள்ளதாக iQoo கூறுகிறது. போனின் விலை இப்போது ரூ.34,990-யாக உள்ளது. இந்த போன் மூன்று ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வேரியண்டில் வருகிறது.
நாட்டில் ஊரடங்கு முடிந்ததும் iQoo 3 விற்பனை தொடங்கும் என்று, iQoo இந்தியாவின் சந்தைப்படுத்தல் இயக்குனர் ககன் அரோரா ட்வீட்டரில் தெரிவித்தார்.
Here's some more love from team #iQOO!
— Gagan Arora #iQOO #SuperFan (@gagan_arora1) April 24, 2020
Introducing new price for #iQOO3 starting at INR 34,990
We are absorbing the recent GST increase to give our customers even more savings. The best time to get #IndiasFastestSmartphone. Sales to start post lockdown. #iQOO3 #monsterinside pic.twitter.com/Xp9S9m1RFm
போனின் 8GB + 128GB (4ஜி) மாடலின் விலை ரூ.36,990-யில் இருந்து ரூ.34,990-யாக குறைக்கப்பட்டுள்ளது.
8 ஜிபி + 256 ஜிபி (4ஜி) வேரியண்ட் ரூ.39,990-யில் இருந்து ரூ.37,990-யாக குறைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், 12 ஜிபி + 256 ஜிபி (5ஜி) வேரியண்ட்டில் எந்த விலைக் குறைப்பும் இல்லை. போனின் விலை ரூ.44,990-யில் உள்ளது.
புதிய விலைகள் Flipkart மற்றும் iqoo.com இரண்டிலும் கிடைக்கும்.
iQoo 3 பிப்ரவரியில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC மற்றும் குவாட் ரியர் கேமரா அமைப்புடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது, HDR 10+ டிஸ்ப்ளே மற்றும் 55W சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜ் வேகமான சார்ஜிங் ஆதரவுடன் 4,440mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்