Photo Credit: Weibo
iQoo 3 பிப்ரவரி 25-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது, மேலும் நிறுவனம் ஏற்கனவே டீசர்கள் மூலம் சாதனம் குறித்த சில விவரங்களை உறுதிப்படுத்தியுள்ளது. 48 மெகாபிக்சல் முதன்மை கேமராவுடன் குவாட் கேமரா அமைப்பை கொண்டுவருவதாக இந்த போன் கிண்டல் செய்யப்படுகிறது, மேலும் AI கண் கண்காணிப்பு தொழில்நுட்பத்தையும் ஒருங்கிணைக்கிறது. இப்போது, புதிய கசிவுகள் வரவிருக்கும் iQoo 3-யின் விலை, விவரக்குறிப்புகள் மற்றும் வடிவமைப்பு விவரங்களைக் குறிக்கின்றன. iQoo இந்தியா இயக்குனர் ககன் அரோராவும் (Gagan Arora) இந்த போனை ஸ்னாப்டிராகன் 865 SoC-யால் இயக்கப்படும் என்பதை தனித்தனியாக உறுதிப்படுத்தியுள்ளார்.
iQoo 3, ஸ்னாப்டிராகன் 865 SoC-யால் இயக்கப்படும் என்பதை உறுதிப்படுத்த அரோரா Twitter-க்கு அழைத்துச் சென்றார். iQoo 3-யின் 4G மற்றும் 5G மாடல்கள் இரண்டும் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கேமிங், அல்ட்ரா கேம் மோட் மற்றும் புதிய 180Hz touch response rate-ற்காக பக்க பேனலில் ‘monster touch buttons'-ஐ கிண்டல் செய்கிறது.
91Mobiles-ன் புதிய அறிக்கை, iQoo 3-யின் விலை இந்தியாவில் ரூ.45,000-க்கு கீழ் இருக்கும் என்று பரிந்துரைக்கிறது. 4 ஜி வேரியண்டின் விலை சுமார் ரூ.35,000-யாக இருக்கும், 5 ஜி மாடலின் விலை சுமார் ரூ.40,000-யாக விலையிடப்படும். பிளிப்கார்ட்டைத் தவிர, இந்த போன் ஆஃப்லைனிலும் கிடைக்கும் என்று அறிக்கை கூறுகிறது.
மேலும், iQoo 3-யின் பல புகைப்படங்கள் Weibo-வில் வெளிவந்துள்ளன. இந்த புகைப்படங்கள் ஒரு தனிப்பட்ட நிகழ்வில் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது, மேலும் அவை போனின் வடிவமைப்பை முன்னும் பின்னும் வெளிப்படுத்துகின்றன. இந்த போன் Volcano Orange, Tornado Black மற்றும் Quantum Silver கலர் ஆப்ஷன்களிலும் அறிமுகப்படுத்தப்படும் என்பதையும் காணலாம். குவாட் கேமராக்கள் பின்புறத்தில் இருக்கின்றன, அதே நேரத்தில் திரையின் மேல் வலதுபுறத்தில் வைக்கப்பட்டுள்ள செல்பி கேமராவுடன் ஒரு hole-punch டிஸ்பிளே உள்ளது.
IQoo 3-ன் முக்கிய விவரக்குறிப்புகள் ஒரு புகைப்படத்திலும் காணப்படுகின்றன, மேலும் போன் ஒரு சூப்பர் AMOLED பேனலுடன் ‘போலார் வியூ டிஸ்பிளே' இருப்பதை பட்டியலிடப்பட்டுள்ளது. இது LPDDR5 RAM மற்றும் UFS 3.1 ஸ்டோரேஜையும் பேக் செய்ய குறிப்பிடப்பட்டுள்ளது. 55W சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜ் கொண்ட 4,400mAh பேட்டரி மற்றும் ஒரு HiFi AK4377A PA ஆம்ப்ளிபையர் ஆகியவை இருக்கப்போகின்றன.
கடைசியாக, போனின் Volcano Orange கலர் ஆப்ஷன் தனித்தனி ரெண்டர்களில் வெளிவந்துள்ளது, மேலும் ஆரஞ்சு மேட் பேக் பேனல் பூச்சு மேற்பரப்பு முழுவதும் கருப்பு புள்ளிகளால் மூடப்பட்டிருக்கும். இந்த ரெண்டர்கள், மேலே 3.5mm ஆடியோ ஜாக் மற்றும் பக்கத்தில் ஆரஞ்சு நிற பவர் பொத்தானை வெளிப்படுத்துகின்றன. இந்த ரெண்டர்களை கீழே காணலாம்.
குறிப்பிட்டுள்ளபடி, பிப்ரவரி 25-ஆம் தேதி iQoo 3 வெளியிடப்படும். இந்த நிறுவனம் போனை அறிமுகப்படுத்த, சீனாவிலும் இந்தியாவிலும் நிகழ்வுகளை நடத்துகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்