iQoo பிராண்டின் இந்தியாவில் முதல் ஸ்மார்ட்போனான iQoo 3, இன்று மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது. இந்தியாவில் iQoo 3 பிப்ரவரி 25-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இது இந்தியாவில் வெளியான இரண்டாவது 5ஜி ஸ்மார்ட்போன் ஆகும்.
iQoo 3-யின் 8 ஜிபி/128 ஜிபி வேரியண்டின் விலை ரூ.36,990-யாகவும், 8 ஜிபி/256 ஜிபி வேரியண்டின் விலை ரூ.39,990-யாகவும், இறுதியாக டாப்-ஸ்பெக்ஸட் 12 ஜிபி/256 ஜிபி 5ஜி வேரியண்டின் விலை 44,990-யாகவும் உள்ளஹ்து. இது, ஐசிஐசிஐ வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு சிறப்பு தள்ளுபடியுடன், பிளிப்கார்ட் வழியாக (via Flipkart) விற்கப்படும். கிரெடிட் கார்டு கொள்முதல் மற்றும் EMI பரிவர்த்தனைகளுக்கு ரூ.3,000 தள்ளுபடி பெறலாம். மேலும், பழைய போன்களின் எக்ஸ்சேஞ் செய்தால் ரூ.3,000 தள்ளுபடியை பிளிப்கார்ட் வழங்குகிறது. 12 மாதங்கள் வரை no-cost EMI ஆப்ஷனும் உள்ளது.
இந்த விற்பனை மார்ச் 4 புதன்கிழமை இன்று மதியம் 12 மணிக்கு தொடங்கும். மேலும், iQoo.com-ல் வாங்கவும் கிடைக்கும்.
டூயல்-சிம் (நானோ) iQoo 3, iQoo UI 1.0 உடன் ஆண்ட்ராய்டு 10 -ல் இயக்குகிறது. இது, 6.44-இன்ச் முழு-எச்டி + (1080 x 2400 பிக்சல்கள்) எச்டிஆர் 10+ சூப்பர் அமோலேட் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது 409ppi பிக்சல் அடர்த்தி கொண்டது. இந்த போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC-யால் இயக்கப்படுகிறது, இது 12 ஜிபி வரை LPDDR5 ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
iQoo 3 ஒரு குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இது, f/1.79 aperture மற்றும் சோனி IMX582 சென்சாருடன் 48 மெகாபிக்சல் பிரதான கேமராவைக் கொண்டுள்ளது. இதற்கு, f/2.46 aperture மற்றும் 20x டிஜிட்டல் ஜூம் வெளியீட்டுடன் 13 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸ் உதவுகிறது. f/2.2 aperture மற்றும் 120 டிகிரி பார்வை கொண்ட 13 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் ஸ்னாப்பரும், பொக்கே ஷாட்ஸ்களுக்கு f/2.4 aperture உடன் 2 மெகாபிக்சல் portrait கேமராவும் உள்ளன. முன்புறத்தில், ஒரு f/2.45 aperture மற்றும் 4K வீடியோ பிடிப்புக்கான ஆதரவுடன் 16 மெகாபிக்சல் செல்பி ஸ்னாப்பர் உள்ளது, இது hole-punch-ல் வைக்கப்பட்டுள்ளது.
iQoo 3-யானது 256 ஜிபி வரை உள் UFS 3.1 ஸ்டோரேஜை வழங்குகிறது. iQoo 3-யின் இணைப்பு விருப்பங்களில் 5G, 4G, Bluetooth 5.1, USB Type-C 2.0, GPS மற்றும் Glonass ஆகியவை அடங்கும். இது தனியுரிம 55W சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்திற்கான ஆதரவுடன் 4,440 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. iQoo, 158.51 x 74.88 x 9.16 மிமீ அளவு மற்றும் 214.5 கிராம் எடையை வழங்குகிறது. அங்கீகாரத்திற்காக இன்-டிஸ்பிளே கைரேகை உணர்திறன் தொகுதி உள்ளது, அதே நேரத்தில் iQoo 3-யில் உள்ள சென்சார்களில் accelerometer, ambient light sensor, compass, gyroscope மற்றும் proximity சென்சார் ஆகியவை அடங்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்