செல்போன் பிரியர்களை காத்திருக்க வைக்கும் iQOO 13!

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 21 ஆகஸ்ட் 2024 11:15 IST
ஹைலைட்ஸ்
  • 50 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா கொண்டிருக்கும்
  • IP68 மதிப்பிடப்பட்ட கட்டமைப்புடன் வெளியாகும்
  • 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் செய்யும்

Photo Credit: iQoo

நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். மொபைல் போன்களை தாண்டியும் மற்ற கேட்ஜெட்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். இப்போ நாம் பார்க்க இருப்பது  iQOO 13 செல்போன் பற்றி தான். 

iQOO 12 செல்போன் மாடல் போலவே பல அப்டேட் செய்யப்பட்ட அம்சங்களுடன் iQOO 13 செல்போன் இந்தியாவில் அறிமுகம் ஆகிறது.   iQOO 12 ஆரம்பத்தில் சீனாவில் நவம்பர் 2023ல் வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து டிசம்பரில் இந்தியாவில் அறிமுகமாகி இருந்தது. இப்போது iQOO 13 இதை விட மேம்பட்ட அம்சங்களுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

டிப்ஸ்டர் பாண்டா இஸ் பால்ட் என்ற சீன தளத்தில் இந்த செல்போன் பற்றிய சில தகவல் வெளியிடப்பட்டுள்ளது.  iQOO 13 வடிவமைப்பு iQOO ஸ்மார்ட்போன்களின் முதல் தலைமுறையைப் போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, பின்புற பேனலில் 1 மிமீ ஆழத்தில் செங்குத்து ஒளி துண்டு பதிக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய iQOO 12 வடிவமைப்பிலிருந்து மாறுபட்டுள்ளது. 

iQOO 13 ஆனது 144Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.78-இன்ச் 2K OLED திரையைக் கொண்டிருக்கும். குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 4 SoC மூலம் இயக்கப்படும். இது குவால்காமின் மிகவும் சக்திவாய்ந்த சிப்செட் ஆகும்.  இது தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்காக IP68-மதிப்பிடப்பட்ட கட்டமைப்புடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.   iQOO 13 போனில் மேம்பட்ட AI அம்சங்கள் கிடைக்கும் என்பதும் தெரியவந்துள்ளது. . இது OIS உடன் 4K வீடியோக்களை பதிவு செய்யும் திறன் கொண்டது. கேமரா அமைப்பு AI டெலிட் மற்றும் AI புகைப்பட மேம்படு அம்சங்களை வழங்கும். 

iQOO 13 செல்போன் மாடல் 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கேமரா, 50 மெகாபிக்சல் ஷூட்டர் மற்றும் 2x ஆப்டிகல் ஜூம் ஆதரவுடன் 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸ் வசதியுடன் வரும் என தெரிகிறது. செல்போனின் முன் பக்க கேமரா 16 மெகாபிக்சல் சென்சாருடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடன் 6,000mAh பேட்டரியை கொண்டிருக்கும் என தெரிய வருகிறது. இது முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட iQOO 12 செல்போன் மாடலின் 5000mAh பேட்டரியை விட அதிகமாகும். சில மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட iQoo Z9 Turbo மொபைலானது 6,000mAh பேட்டரி மற்றும் 80W வயர்டு சார்ஜிங் சப்போர்ட்டை கொண்டிருந்தது. 

மேலும் வைஃபை, என்எப்சி, புளூடூத், 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி சப்போர்ட் செய்கிறது. கூடுதலாக மெமரி நீட்டிப்பு வசதியும் கொண்டுள்ளது. நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் உள்ளது. இந்த செல்போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது iQoo நிறுவனம்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: iQOO 13, iQOO 13 Design, iQOO 13 Specifications, iQoo 12, iQOO
 ...மேலும்
        
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. iQOO 15: Snapdragon 8 Gen 4, 150W சார்ஜிங்! அடுத்த வருஷம் மாஸ் என்ட்ரி கொடுக்கப்போகுது!
  2. Infinix Hot 60i 5G: ₹10,000-க்குள்ளே 6,000mAh பேட்டரியுடன் மாஸ் என்ட்ரி!
  3. Vu Glo QLED TV 2025: 120W சவுண்ட்பார், 120Hz ரிஃப்ரெஷ் ரேட் உடன் அதிரடி! விலை மற்றும் முழு அம்சங்கள்!
  4. Realme P4 சீரிஸ்: 6,000 nits டிஸ்ப்ளேவுடன் ஒரு புது புரட்சி! ஆகஸ்ட் 20-ல் இந்தியாவில் வெளியீடு
  5. Oppo K13 Turbo: போனுக்குள்ள ஃபேனா? இந்தியால லான்ச் ஆன முதல் கூலிங் ஃபேனுடன் கூடிய ஸ்மார்ட்போன்
  6. Lava Blaze AMOLED 2 5G: ₹13,499-க்கு AMOLED டிஸ்ப்ளே, Dimensity 7060 ப்ராசஸரோட மிரட்டல் லான்ச்
  7. Tecno Spark Go 5G: ₹10,000-க்குள்ள இந்தியாவுலயே ஸ்லிம்மான 5G போன்! ஆகஸ்ட் 14-ல் வெளியீடு!
  8. Panasonic-ன் புது மிரட்டல் டிவி! MiniLED தொழில்நுட்பம், Dolby Atmos-உடன் வெளியீடு!
  9. Samsung Galaxy A17 5G: ₹17,500-க்கு ஒரு பெரிய பேட்டரி போன்! பட்ஜெட் மார்க்கெட்டில் ஒரு புதிய அஸ்திரம்!
  10. Lava-வின் புதிய அஸ்திரம்! Blaze AMOLED 2 5G லான்ச் தேதி உறுதி! AMOLED டிஸ்ப்ளே உடன் அதிரடி!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.