Photo Credit: iQOO
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது iQOO 13 செல்போன் பற்றி தான்.
iQOO 13 செல்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சரியான வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அமேசான் மூலம் விற்பனைக்கு வருகிறது. iQOO 13 செல்போனில் கேமரா யூனிட் சுற்றியுள்ள பின்புறத்தில் ஒரு டைனமிக் லைட்டிங் அமைப்பு உள்ளது. அக்டோபர் 30ல் சீனாவில் வெளியிடப்பட்டது. இது Snapdragon 8 Elite சிப்செட்டில் இயங்கும். இதில் உள்ள Q10 8T LTPO OLED டிஸ்ப்ளே 2K தெளிவுத்திறனுடன் இருக்கிறது.
சமீபத்தில் வெளியான தகவல்படி, இந்தியாவில் iQOO 13 செல்போனில் புதிய ஹாலோ லைட் அம்சம் இருப்பது உறுதியானது. இது iQOO நிறுவனத்தின் இந்திய இணையதளம் மற்றும் அமேசான் மூலம் விற்பனைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. Amazon மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் போனின் பின்புற வடிவமைப்பைக் காட்டும் டீசர் வெளியானது. இது கேமிங் அனுபவத்திற்காக டைனமிக் லைட்டிங் விளைவுகளை வழங்கும் என கூறப்படுகிறது.
iQOO 13 அக்டோபர் 30 ஆம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது கருப்பு, பச்சை, சாம்பல் மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. LTPO OLED டிஸ்ப்ளே 2K தெளிவுத்திறனுடன் வருகிறது. இது 144Hz புதுப்பிப்பு வீதத்துடன் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது 7.99 மிமீ தடிமனான பாடியை கொண்டிருக்கும். 120W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடன் 6,150mAh பேட்டரியைக் கொண்டிருக்கும். iQOO 12 சாதனம் 5000mAh பேட்டரி உடன் 120W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்டிருந்தது. iQOO 13 செல்போன் கேமிங்கிற்காக நிறுவனத்தின் சுய-மேம்படுத்தப்பட்ட கேமிங் சிப் Q2 கொண்டிருக்கும் என தெரிகிறது.இது சீன சந்தையில் OriginOS 5 உடன் வரும் என கூறப்பட்டுள்ளது.
இது 50MP கொண்ட Sony IMX921 மெயின் கேமரா, 50MP உடன் Samsung ISOCELL JN1 அல்ட்ரா வைடு சென்சார், 50MP உடன் Sony IMX826 டெலிபோட்டோ லென்ஸ் உடன் ட்ரிபிள் ரியர் கேமரா அம்சத்தை வழங்குகிறது. இந்த போனின் ரியர் கேமரா பம்பில் நிறுவனம் LED ரிங் லைட்டை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது மல்டி லேயர் கிராபைன் மற்றும் 7K அல்ட்ரா லார்ஜ் ஏரியா விவி ஹீட் ஸ்பிரேட்டர் ஆதரவை கொண்டிருக்குமென்று கூறப்பட்டுள்ளது. இந்த சாதனம் சீனாவில் அறிமுகம் செய்யப்படுவதை தொடர்ந்து, இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இந்த போனின் இந்திய அறிமுகம் குறித்த டீசர்களும் வெளியிடப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்