iPhone 11 மற்றும் iPhone 11 Pro-வுக்கு வருகையில், இரண்டு வேரியண்டுகளும் விலைக் குறைப்பைக் காணாது. ஆனால், பிளிப்கார்ட் விற்பனையின் போது, ரூ. 10,817 முதல் தொடங்கி EMI-களுடன் no-cost EMI ஆப்ஷன்களும் பட்டியலிடப்படும்.
HDFC கார்டுதரர்கள், iPhone XR-ல் ரூ.5,000 தள்ளுபடியை பெறலாம்
பிளிப்கார்ட் தனது தளத்தில் ஆப்பிள் டேஸை ஹோஸ்டிங் செய்து பல்வேறு ஐபோன்களில் தள்ளுபடி மற்றும் ஒப்பந்தங்களை வழங்குகிறது. இந்த விற்பனை நாளை அதாவது பிப்ரவரி 5-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 8 வரை நடைபெறும். no-cost EMI ஆப்ஷன்களுடன் ஐபோன் iPhone XR பட்டியலிடப்படும். மேலும், iPhone XS 64GB வேரியண்ட் ரூ. 5,000 தள்ளுபடி விலைக் குறியீட்டுடன் பட்டியலிடப்பட்டுள்ளது. iPhone 11 மற்றும் iPhone 11 Pro no-cost EMI ஆப்ஷன்களுடன் ரூ. 10,817-ல் இருந்து தொடங்குகிறது. மேலும், வாங்கும் போது கூடுதல் தள்ளுபடியை எச்.டி.எஃப்.சி வங்கி வழங்குகிறது.
iPhone XS 64GB வேரியண்ட்டில் தொடங்கி, பிளிப்கார்ட் ஆப்பிள் டேஸ் விற்பனை, இந்த மாடலை ரூ. 54,999 தள்ளுபடி விலைக் குறையுடன் பட்டியலிடப்பட்டுள்ளது. தற்போது பட்டியலிடப்பட்ட விலை ரூ. 59,999 ஆகும். அதாவது, பிளிப்கார்ட் விற்பனையின் போது ரூ. 5,000 விலைக் குறைப்புடன் வழங்கப்படும். இ-காமர்ஸ் தளம் iPhone XS-லும் கூடுதல் எக்ஸ்சேஞ் தள்ளுபடியை வழங்கும்.
iPhone 11 மற்றும் iPhone 11 Pro-வுக்கு வருகையில், இரண்டு வேரியண்டுகளும் விலைக் குறைப்பைக் காணாது. ஆனால், பிளிப்கார்ட் விற்பனையின் போது, ரூ. 10,817 முதல் தொடங்கி EMI-களுடன் no-cost EMI ஆப்ஷன்களும் பட்டியலிடப்படும். மேலும், எச்.டி.எஃப்.சி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள், EMI மற்றும் non-EMI பரிவர்த்தனைகள் மூலம் வாங்கும் போது ரூ. 7,000 தள்ளுபடியை பெறலாம்.
இதேபோல், iPhone XR-ம் விலைக் குறைப்பையும் காணாது. ஆனால், பிளிப்கார்ட், மாதத்திற்கு ரூ. 8,317-ல் தொடங்கக்கூடிய no-cost EMI ஆப்ஷனை வழங்கும். எச்.டி.எஃப்.சி பேண்ட் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் ரூ. 5,000 தள்ளுபடியை பெறலாம். iPhone 8 64GB தள்ளுபடி விலையில் ரூ. 34,999-யாக பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும், பழைய போன்களான iPhone 7 மற்றும் iPhone 7 Plus முறையே ரூ. 24,999 மற்றும் ரூ. 33,999-ல் இருந்து தொடங்கும். iPhone 6S 32GB மாடல் பிளிப்கார்ட் விற்பனையின் போது ரூ. 23,999-யாக பட்டியலிடப்படும்.
ஆப்பிள் நாட்கள் ஒப்பந்தங்கள் பிளிப்கார்ட்டில் பிரத்யேக விற்பனை பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Oppo Find X9s, Oppo Find X9 Ultra, Oppo Find N6 Global Launch Timelines and Colourways Leaked
Realme 16 5G With 7,000mAh Battery, MediaTek Dimensity 6400 Turbo SoC Launched: Price, Features
Apple Confirms Second Store in Mumbai Will Open 'Soon'; Reportedly Leases Space for Corporate Office in Chennai