Apple நிறுவனத்தின் புதிய ஐபோன் எஸ்இ (2020) அறிமுகமாகியுள்ளது. இந்த ஐபோன் மாடலின் விலை மிகவும் மலிவாகும். புதிய ஐபோன், ஆப்பிள் ஏ 13 பயோனிக் சிப்பால் இயக்கப்படுகிறது. இது, டச் ஐடி கைரேகை சென்சாரையும் கொண்டுள்ளது.
அமெரிக்காவில் iPhone SE (2020)-யின் 64 ஜிபி மாடலின் விலை 399 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.30,600)-யாகவும், 128 ஜிபி மாடலின் விலை 499 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.38,200)-யாகவும், 256 ஜிபி மாடலின் விலை 549 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.45,000)-யாகவும் உள்ளது. இந்த போன், கருப்பு, வெள்ளை மற்றும் சிவப்பு கலர் ஆப்ஷன்களில் வருகிறது. அமெரிக்காவில் ஏப்ரல் 24 முதல் விற்பனைக்கு வரும்.
ஐபோன் எஸ்இ (2020)-யின் அனைத்து வேரியண்டுகளுக்கான இந்தியா விலை மற்றும் வெளியீட்டு தேதி இன்னும் வெளியிடப்படவில்லை.
ஐபோன் எஸ்இ (2020)-யில் 750x1334 பிக்சல் தெளிவுதிறனுடன் 4.7 இன்ச் ரெடினா எச்டி ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே உள்ளது. இது 625 நிட்ஸின் உச்ச பிரகாசத்தை வழங்குகிறது. டால்பி விஷன் மற்றும் எச்டிஆர் 10-க்கான ஆதரவு உள்ளது. டிஸ்பிளே பேனலில் புதிய ஐபோன் மாடல்களில் காணப்படும் ஹாப்டிக் டச் ஆதரவு உள்ளது. இந்த போன், ஆப்பிள் ஏ 13 பயோனிக் சிப்பால் இயக்கப்படுகிறது. இது, தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி 67 மதிப்பீட்டையும் கொண்டுள்ளது. இந்த போன், நீரில் 30 நிமிடங்கள் வரை செயலிழக்காமல் இருக்கும்.
ஐபோன் எஸ்இ (2020)-வின் பின்புறத்தில் ஒற்றை 12 மெகாபிக்சல் கேமரா சென்சாரைக் கொண்டுள்ளது. இதில் Slow Sync உடன் எல்இடி ட்ரூ டோன் ஃபிளாஷ் உள்ளது. இது 60fps வரை 4 கே வீடியோ பதிவையும், புகைப்படங்களுக்கு ஸ்மார்ட் எச்டிஆரையும் வழங்குகிறது. பின்புற கேமராவைப் பாதுகாக்கும் சபையர் கிரிஸ்டல் லென்ஸ் கவர் உள்ளது. செல்பி மற்றும் வீடியோக்களுக்கு, முன்பக்கத்தில் 7 மெகாபிக்சல் கேமரா உள்ளது. புதிய ஐபோன், டச் ஐடி கைரேகை சென்சாருடன் வருகிறது.
ஆப்பிள் வழக்கம்போல, பேட்டரியின் அளவு அல்லது ஐபோன் எஸ்இ (2020)-வில் ரேம் அளவை விவரிக்கவில்லை. இது குய் வயர்லெஸ் சார்ஜிங் தரத்தைப் பயன்படுத்தி வயர்லெஸ் சார்ஜிங்கும் துணைபுரிகிறது. இந்த போன் 138.4x67.3x7.3 மிமீ அளவு மற்றும் 148 கிராம் எடையும் கொண்டது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்