ஆப்பிள் ஸ்டோர் பட்டியல் அடுத்த தலைமுறை ஐபோன் எஸ்இ ஐபோன் 8-ன் வடிவமைப்பைப் பயன்படுத்தும் என்று தெரிவிக்கிறது.
புதிய ஐபோன் SE-யின் இருப்பை ஆப்பிள் ஸ்டோர் ஒரு திரை பாதுகாப்பான் பட்டியல் மூலம் பரிந்துரைத்துள்ளது
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய 4.7 இன்ச் “ஐபோன் எஸ்இ” 2020 மாடல் வெளியாக தயாராக உள்ளது. மேலும், வரவிருக்கும் ஐபோன் எஸ்இ மாடலின் காலர் ஆப்ஷன்கள் மற்றும் ஸ்டோரேஜ் வேரியண்டுகள் ஆன்லைன் ஆப்பிள் ஸ்டோரில் வெளிவந்துள்ளன.
ஆப்பிள் ஸ்டோரில் உள்ள பட்டியல் பெல்கின் இன்விசி கிளாஸ் அல்ட்ரா ஸ்கிரீன் பாதுகாப்பைக் காட்டுகிறது. தற்போதுள்ள ஐபோன் எஸ்இ மாடலானது iPhone 5s போன்று வருகிறது. இதன் கேமரா மற்றும் பிராசசர் iPhone 6s போன்று உள்ளது. ஐபோன் எஸ்இ, ஐபோன் 8-ன் வடிவமைப்பைப் பயன்படுத்தும் என்று ஆப்பிள் ஸ்டோர் பட்டியல் தெரிவிக்கிறது.
Apple 4.7- மற்றும் 5.5 இன்ச் அளவுகளில் ஸ்கிரீன் பாதுகாப்பாளரை வழங்குகிறது. வழக்கமான மாடலுடன் iPhone SE மாடலும், வேலையில் இருப்பதாக முந்தைய அறிக்கைகள் பரிந்துரைத்ததுக்கு முரணானது. ஆயினும்கூட, நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இரண்டையும் சேர்க்கக்கூடும். இந்த ஆன்லைன் பட்டியலானது, ஐபோன் எஸ்இ (2020) வெளியீடு உடனடி இருக்கக்கூடும் என்று இது அறிவுறுத்துகிறது.
9to5Mac, புதிய ஐபோன் எஸ்இ பற்றிய சில புதிய விவரங்களையும் தெரிவித்துள்ளது. வரவிருக்கும் மாடலில் கருப்பு, வெள்ளை மற்றும் PRODUCT (சிவப்பு) ஆகிய மூன்று கலர் ஆப்ஷன்கல் இருப்பதாகக் கூறப்படுகிறது. இது சிலிகான் மற்றும் தோல் பொருட்களில் ஐந்து தனித்துவமான உத்தியோகபூர்வ கேஸ்கலால் இணைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த போன் 64 ஜிபி, 128 ஜிபி மற்றும் 256 ஜிபி ஆகிய மூன்று ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வழங்கப்படும்.
புதிய அறிக்கைகள் புதிய ஐபோன் எஸ்இ விலையை 399 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.30,300)-யாக நிர்ணயம் செய்யலாம். இந்த போன் டச் ஐடி கைரேகை சென்சாரைத் தக்க வைத்துக் கொள்ளும்.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றால், புதிய ஐபோன் எஸ்.இ விநியோகத்தில் சில தாமதம் ஏற்படும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Cat Adventure Game Stray is Reportedly Coming to PS Plus Essential in November