அறிக்கையின்படி, 2020 முதல் காலாண்டில் iPhone SE 2 அறிமுகம் செய்யப்படும். இதன் விலை $399 (சுமார் ரூ .28,200) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. colour, RAM மற்றும் storage models உள்ளிட்ட iPhone SE 2-வின் பிற விவரக்குறிப்புகளை Ming-Chi Kuo கொண்டுள்ளார்.
iPhone SE 2, 3GB LPDDR4X RAM உடன் இணைக்கப்பட்டு, A13 Bionic chip இயக்கப்படும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறது. ஸ்டோரேஜ் ஆப்ஷனில் 64 ஜிபி மற்றும் 128 ஜிபி வழங்கப்படும். மேலும் இது 3D Touch ஆதரவை வழங்காது என்று கூறப்படுகிறது. Space Grey, Silver மற்றும் Red ஆகிய நிறங்களில் iPhone SE 2 வெளிவரும்.
iPhone SE அறிமுகப்படுத்தப்பட்ட விலையைப் போலவே, iPhone SE 2-வின் விலை $ 399 (சுமார் ரூ. 28,200)-க்கு இருக்கும் என்று அறிக்கை கூறுகிறது. இதன் வடிவமைப்பு iPhone 8-ஐப் போலவே வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்றும் Ming-Chi Kuo கூறுகிறார்.
முந்தைய அறிக்கைகளில், iPhone SE 2, முகப்பு பொத்தானில் integrate Touch ID உடன் 4.7-inch LCD display இருக்கும் என்று Ming-Chi Kuo பரிந்துரைத்துரைக்கிறார். இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்திய பிறகு, iOS 13-ன் சமீபத்திய பதிப்பில் இயங்கும்.
2020-ஆம் ஆண்டில், iPhone SE 2-யின் 30-40 மில்லியன் யூனிட்களை விற்பனை செய்யும் என்று Apple கணித்துள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்