ஐபோனில் டூயல் சிம் - இந்தியாவுக்கு வருமா என்பதில் சந்தேகம்

விளம்பரம்
Written by Sumit Chakraborty மேம்படுத்தப்பட்டது: 5 ஆகஸ்ட் 2018 15:32 IST

 

ஆப்பிள் நிறுவனம் அடுத்த மாதம் அறிமுகப்படுத்த இருக்கும் ஐபோன், இரண்டு சிம்களை பயன்படுத்தக் கூடியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஐ.ஓஎஸ்12 கோடிலும், அதற்கான சாத்தியங்கள் தெரிந்ததாகவும் கூறப்படுகிறது.

மூன்று ஐபோன்களை வெளியிட இருப்பதாகவும் தகவல்கள் பரப்பப்படுகின்றன. அதில் ஒன்று 6.1 இன்ச் எல்.சி.டி டிஸ்பிளேவும், 5.8 மற்றும் 6.5 இன்ச் ஓ.எல்.இ.டி டிஸ்பிளேவும் கொண்ட இரண்டும் இருக்கும் என்றும் ஆன்லைனில் கசிந்த தகவல்கள் கூறுகின்றன. இந்த மூன்றில் ஒன்றில் மட்டும் இரண்டு சிம்கள் போடும் வகையில் இருக்கும் என்றும், அதுவும் குறிப்பிட்ட ஒரு சந்தைக்கு மட்டுமே அறிமுகமாக இருப்பதகாவும் தகவல் கிடைத்துள்ளது.

தாய்வான் யுனைட்டெட் என்ற செய்தி நிறுவனம், 6.1 இன்ச் எல்.சி.டி ஐபோனில் தான் டூயல் சிம் ஸ்லாட் இருக்கும் என்கிறது. இதுதான் ஐபோனின் மிக விலைக் குறைந்த மொபைலாக இருக்கும். மேலும், இது பிரத்யேகமாக சீன சந்தையில் மட்டுமே அறிமுகமாகிறது என்றும் கூறியிருந்தது. எனவே இந்தியாவில் இந்த ஐபோன் விற்பனைக்கு வராது என்று புரிந்து கொள்ளலாம்.

டூயல் சிம் ஸ்மார்ட்ஃபோன்களை பல நிறுவனங்கள் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதால், புதிய டூயல் சிம் ஐபோன் இந்தியாவில் தாமதமாக அல்லது சீனாவுக்கு அடுத்தபடியாக கொண்டு வரப்படலாம் என்று கருதப்படுகிறது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Apple
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. நத்திங் (Nothing) பிராண்டின் அதிரடி! பட்ஜெட் விலையில் ஹெட்ஃபோன் மற்றும் வாட்ச் வருது
  2. டிசைன்ல சொக்க வைக்கும் Realme 16 Pro Series! கேமரால மிரட்டுது, விலையில அதட்டுது! முழு விபரம் உள்ளே
  3. Redmi-யின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்! 200MP கேமரா, வேற லெவல் டிஸ்ப்ளே - Redmi Note 15 5G முழு விவரம் இதோ
  4. இது போன் இல்ல... நடமாடும் பவர் பேங்க்! 10080mAh பேட்டரியுடன் HONOR Power 2 வந்துவிட்டது
  5. வீட்டுக்குள்ள ஒரு தியேட்டர்! சாம்சங்கின் புது 130-இன்ச் Micro RGB TV - கண்ணைப் பறிக்கும் கலர், கலக்கும் AI அம்சங்கள்
  6. கேமிங் போன் பிரியர்களுக்கு பேட் நியூஸ்! 2026-ல் புதிய Zenfone மற்றும் ROG போன்கள் வராது? அசுஸ் எடுத்த திடீர் முடிவு! என்ன காரணம்?
  7. கேமராவுக்காகவே பிறந்த போன்கள்! விவோ X200T & X300 FE இந்தியா வர்றது கன்பார்ம்! BIS லீக் கொடுத்த அதிரடி அப்டேட்
  8. சார்ஜ் தீரும்-னு கவலையே வேண்டாம்! ஒப்போ-வின் புது 'பேட்டரி மான்ஸ்டர்' A6s 4G வந்தாச்சு! சும்மா அதிருதுல்ல
  9. மோட்டோரோலாவோட அடுத்த மாஸ்டர் பிளான்! முதல்முறையாக புக் மாதிரி விரியும் ஃபோல்டபிள் போன்! சாம்சங் ஃபோல்டுக்கு நேரடி போட்டி
  10. கேமரா கண்ணுக்கே தெரியாது! Galaxy S26-ல் வரப்போகும் மிரட்டலான One UI 8.5 அம்சம்! இனி முழு டிஸ்பிளேவும் உங்களுக்கே
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.