iPhone 11 Pro மற்றும் iPhone 11 Pro Max என இரண்டு ஸ்மார்ட்போன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிறுவனத்தின் டாப்-எண்ட் வரிசையில் இடம்பெற்றுள்ள இந்த ஸ்மாட்ர்ட்போன்களை தவிர்த்து, கடந்த செவ்வாய்கிழமை நடந்த நிகழ்வில் ஆப்பிள், தனது நிறுவனத்தின் மலிவு விலை மாடலான iPhone 11 ஸ்மார்ட்போனும் இந்த நிகழ்வில் அறிமுகமாகியுள்ளது. இந்த நிகழ்வில் ஆர்கேட் கேம் சந்தா சேவை மற்றும் ஆப்பிள் டிவி+ வீடியோ ஸ்ட்ரீமிங் சேவை ஆகியவற்றை பற்றிய தகவல்களையும் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்வில், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 (Apple Watch Series 5) மற்றும் புதிய 10.2 இன்ச் ஐபாட் (iPad) ஆகியவற்றையும் அறிமுகம் செய்துள்ளது. ஐபோன் நிறுவனத்தின் டாப்-எண்ட் மாடல்களான iPhone 11 Pro மற்றும் iPhone 11 Pro Max பற்றிய தகவல்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
iPhone 11 Pro ஸ்மார்ட்போனின் இந்திய விலை 99,900 ரூபாயிலிருந்து துவங்குகிறது. 64GB சேமிப்பு கொண்ட இந்த வகையில் அமெரிக்காவில் 999 டாலர்கள் (சுமார் 71,600 ரூபாய்) என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. 256GB மற்றும் 512GB என்ற அளவில் அறிமுகமாகியுள்ள மற்ற இரண்டு வகைகள், 1,13,900 ரூபாய் மற்றும் 1,149 டாலர்கள் (சுமார் 82,301 ரூபாய்), 1,31,900 ரூபாய் மற்றும் 1,349 டாலர்கள் (சுமார் 96,600 ரூபாய்) என்ற விலைகளில் இந்தியா மற்றும் அமெரிக்காவில் அறிமுகமாகியுள்ளது.
iPhone 11 Pro Max-ஐ பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போனின் 64GB அடிப்படை வகை இந்தியாவில் 1,09,900 ரூபாய் என்ற விலையிலும், அமெரிக்காவில் 1,099 டாலர்கள் (சுமார் 78,700 ரூபாய்) என்ற விலையிலும் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 256GB மற்றும் 512GB என மேலும் இரண்டு வகைகளில் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் இந்தியா மற்றும் அமெரிக்காவில் 1,23,900 ரூபாய் மற்றும் 1,249 டாலர்கள் (சுமார் 89,500 ரூபாய்), 1,41,900 ரூபாய் மற்றும் 1,449 டாலர்கள் (சுமார் 1,03,800 ரூபாய்) என்ற விலைகளில் விற்பனையாகவுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் iPhone 11 Pro மற்றும் iPhone 11 Pro Max என்ற இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் பச்சை (Midnight Green), சாம்பல் (Space Gray), சில்வர் (Silver), மற்றும் கோல்ட் (Gold) என நான்கு வண்ணங்களில் விற்பனையாகும் என அறிவித்துள்ளது. முதல் பகுதி நாடுகளில், இந்த ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவுகள் செப்டம்பர் 13 அன்று துவங்கவுள்ளது, மேலும் விற்பனை செப்டம்பர் 20-ல் நடைபெறும். இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன்களின் விற்பனை செப்டம்பர் 27 அன்று துவங்கவுள்ளது.
மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்கள் என்று அழைக்கப்படும் இந்த iPhone 11 Pro மற்றும் iPhone 11 Pro Max ஆகியவை, Pro பயன்பாட்டாளர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய Pro டிஸ்ப்ளே, மூன்று பின்புற கேமரா அமைப்பு, மற்றும் மேம்படுத்தப்பட்ட பேட்டரி ஆயுளை கொண்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மேம்படுத்தப்பட்ட iOS 13 இயக்க அமைப்பை கொண்டு செயல்படும் இந்த iPhone 11 Pro மற்றும் iPhone 11 Pro Max ஸ்மார்ட்போன்கள் ஹேப்டிக் டச் வசதியுடன் முறையே 5.8-இன்ச் மற்றும் 6.5-இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED திரைகளை கொண்டுள்ளது. கடினமான மேட் கிளாஸ் மற்றும் ஸ்டெய்ன்லெஸ்-ஸ்டீல் வடிவமைப்பு கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 4மீ தூரம் வரை 30 நிமிடங்களுக்கு நீர் எதிர்ப்பு (water-resistance) திறனை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன்களில் மூன்றாவது தலைமுறை நியூரல் இஞ்சினுடன் கூடிய ஆப்பிள் நிறுவனத்தின் புதிய A13 பயோனிக் சிப் பொருத்தப்பட்டுள்ளது. நிகழ்-நேர போட்டோ மற்றும் வீடியோ ஆய்விற்கு இந்த நியூரல் இஞ்சின் பயன்படும் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய ஸ்மார்ட்போன்களில் இடம்பெற்றுள்ள மிகப்பெரிய புதிய மேம்படுத்தப்பட்ட அம்சம் என்னவென்றால், பின்புறத்தில் 3 கேமரா அமைப்பு. ஆப்பிள் நிறுவனம், இதை Pro கேமரா அமைப்பு எனக் குறிப்பிடுகிறது. இந்த மூன்று கேமராக்களும் 12 மெகாபிக்சல் அளவில் அமைத்துள்ளது - f/1.8 வைட் ஆங்கிள், f/2.4 அல்ட்ரா-வைட் ஆங்கிள் மற்றும் f/2.4 துலைதூர போட்டோ லென்ஸ் கேமரா என்ற மூன்று கேமராக்கள். இவற்றில் வைட் ஆங்கிள் மற்றும் துலைதூர போட்டோ லென்ஸ் கேமராக்கள், ஆப்டிகல் புகைப்பட நிலைப்படுத்துதல் திறனை கொண்டுள்ளது. மேலும், மூன்று பின்புற கேமராக்களும் 4K வீடியோ ஒளிப்பதிவு வசதியை கொண்டுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் கேமராவை பொருத்து மேம்படுத்தப்பட்ட மென்பொருட்களை கொண்டு வந்துள்ளது. அவற்றில் சில, டார்க் மோட், மேம்படுத்தப்பட்ட போர்ட்ரைட் மோட், ஸ்மார்ட் HDR மற்றும் மாற்றி வடிவமைக்கப்பட்ட கேமரா செயலி.
முன்புறத்தை பொருத்தவரை ஸ்மார்ட் HDR, 4K வீடியோ ஒளிப்பதிவு மற்றும் ஸ்லோ-மோஷன் (slo-mo) வீடியோக்களை எடுக்கும் திறன் கொண்ட 12 மெகாபிக்சல் கேமரா இடம்பெற்றுள்ளது.
30 சதவிகித வேகமான செயல்பாட்டுடன், இந்த புதிய ஐபோன் மாடல்களின் Face ID-யும் மேம்படுத்தப்பட்டு அறிமுகமாகியுள்ளது. இடஞ்சார்ந்த ஆடியோ, டால்பி அட்மோஸ் வசதி மற்றும் இரண்டு சிம் வசதி என பல அம்சங்களை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.
பேட்டரியை பொருத்தவரை iPhone 11 Pro ஸ்மார்ட்போன் iPhone XS ஸ்மார்ட்போனைவிட நான்கு மணி நேரம் அதிகம் நீடிக்கும் பேட்டரியை கொண்டுள்ளது. iPhone 11 Pro Max, iPhone XS Max-ஐ விட ஐந்து மணி நேரம் அதிகம் நீடிக்கும் பேட்டரியுடன் 'ஐபோன்களிலேயே மிக அதிக பேட்டரி ஆயுளைக் கொண்ட ஸ்மார்ட்போன்' என்ற பெயரை பெற்றுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்