Transsion Holdings-ன் பிரீமியம் ஸ்மார்ட்போன் பிராண்டின் புதிய ஸ்மார்ட்போனான Infinix S5, செவ்வாய்க்கிழமை அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. hole-punch டிஸ்பிளே, 90.5 percent screen-to-body ratio, quad rear கேமரா அம்சம் மற்றும் 32-megapixel selfie camera ஆகியவை அடங்கும். இந்தியாவில் Infinix S5-யின் விலை, வெளியீட்டு தேதி மற்றும் விவரக்குறிப்புகள் உள்ளிட்ட கூடுதல் விவரங்களைத் தெரிந்துக்கொள்ள படிக்கவும்.
இந்தியாவில் Infinix S5-யின் விலை, வெளியீட்டு தேதி:
இந்தியாவில் Infinix S5-யின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜின் விலை 8,999 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது Quetzal Crystal மற்றும் Violet நிறங்களில் கிடைக்கும். Infinix S5 இந்தியாவில், அக்டோபர் 21 மதியம் 12 மணி முதல் பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வரும்.
விவரக்குறிப்புகள்:
இரட்டை சிம் (நானோ) Infinix S5, Android 9.0 Pie அடிப்படியாகக் கொண்டு XOS 5.5 Cheetah இயக்குகிறது. இது 6.6-inch HD+ (720x1600 pixels) டிஸ்பிளேவுடன் 20:9 aspect ratio, 480 nits peak brightness மற்றும் 90.5 percent screen-to-body ratio ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது 4GB RAM உடன் இணைக்கப்பட்டு, octa-core MediaTek Helio P22 SoC-யால் இயங்குகிறது.
குறிப்பிட்டுள்ளபடி, Infinix S5 ஒரு குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. f/1.8 aperture உடன் 16-megapixel primary sensor, 2.5cm-ல் ஷூட் செய்வதற்கு 2-megapixel Super Macro lens, 114-degree பார்வைக்கு 5-megapixel wide-angle lens மற்றும் 2-megapixel depth sensor ஆகிய அம்சங்கள் அடங்கும். முன்பக்கத்தில், 4-in-1 pixels மற்றும் f/2.0 aperture கொண்ட 32-megapixel camera உள்ளது.
Infinix S5 64 ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜுடன் வருகிறது. microSD card வழியாக அதன் சொந்த பிரத்யேக ஸ்லாட்டுடன் (256 ஜிபி வரை) விரிவாக்கக்கூடியது. இது பின்புற கைரேகை ஸ்கேனரைக் கொண்டுள்ளது. இந்த போன் 4,000mAh பேட்டரியில் இயங்குகிறது. 4 ஜி யில் 18.8 மணிநேர பேச்சு நேரத்தையும் 32 மணிநேர மியூசிக் பிளேபேக்கையும் வழங்க மதிப்பிடப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்