Infinix S5 Lite-ல் 4,000mAh பேட்டரி பொருத்தப்பட்டு வருகிறது
டிரான்ஷன் ஹோல்டிங்ஸுக்குச் சொந்தமான பிராண்டின் சமீபத்திய ஸ்மார்ட்போனான Infinix S5 Lite இந்தியாவில் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. பெயர் தெளிவாகக் குறிப்பிடுவது போல, Infinix S5 Lite என்பது Infinix S5-ன் watered-down பதிப்பாகும். இது கடந்த மாதம் அதிகாரப்பூர்வமாக சென்றது.
இந்தியாவில் Infinix S5 Lite-ன் விலை:
Infinix S5 Lite -ன் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டிற்கு இந்தியாவில் 7,999 ரூபாயாக விலையிடப்படுள்ளது. புதிய Infinix தொலைபேசி Midnight Black, Quetzal Cyan மற்றும் Violet வண்ண விருப்பங்களில் வருகிறது. மேலும் நவம்பர் 22 மதியம் 12 மணி முதல் பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வரும்.
Infinix S5 Lite-ன் விவரக்குறிப்புகள்:
டூயல் சிம் (நானோ) Infinix S5 Lite XOS 5.5 உடன் Android Pie-யால் இயங்குகிறது. இது 20:9 aspect ratio உடன் 6.55-inch HD+ (720 x 1600 pixels) டிஸ்பிளே, 480 nits of peak brightness, 90.5 percent screen-to-body ratio மற்றும் pixel density of 268ppi ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த போன் 2.0GHz clocked செய்யப்பட்ட octa-core MediaTek Helio P22 SoC-யால் இயக்கப்படுகிறது. இது IMG PowerVR GE8320 GPU மற்றும் 4GB of RAM உடன் டிக் செய்கிறது.
Infinix S5 Lite, Midnight Black, Quetzal Cyan மற்றும் Violet ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது
தொலைபேசியின் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைப் பொறுத்தவரை, 2-megapixel depth கேமரா மற்றும் dedicated low-light சென்சார் உதவியோடு f/1.8 aperture உடன் 16-megapixel முதன்மை சென்சார் மற்றும் 78-degrees field of view-வைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், f/2.0 aperture மற்றும் 77.3-degrees field of view உடன் 16-megapixel செல்பி கேமரா உள்ளது. இது பிரகாசமான புகைப்படங்களை வழங்க 4-in-1 pixel binning தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. மேலும், AI Portrait, AI Face Beauty மற்றும் பலவற்றில் wide selfie போன்ற அம்சங்களை ஆதரிக்கிறது.
Infinix S5 Lite, 64GB ஆன்போர்டு ஸ்டோரேஜை பேக் செய்கிறது. microSD card slot வழியாக (256GB வரை) ஸ்டோரேஜ் விரிவாக்கத்தை ஆதரிக்கிறது. போனின் இணைப்பு விருப்பங்களில் 4G LTE, Bluetooth 5.0, FM radio மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும். இந்த போன் 4,000mAh பேட்டரியை பேக் செய்கிறது. இது 18.82 நேர 4G talk time-ஐ வழங்கும் என்று கூறப்படுகிறது. மேலும், 5V/ 1.2A சார்ஜர் வழியாக சார்ஜ் செய்துகொள்ளலாம். போனில் உள்ள சென்சார்களில் accelerometer, ambient light sensor, digital compass மற்றும் proximity சென்சார் ஆகியவை அடங்கும். Infinix S5 Lite, 164x76x7.9mm அளவீடையும், 178 கிராம் எடையையும் கொண்டதாகும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்