அறிமுக சலுகையாக அக்டோபர் 30-ஆம் தேதி வரை, இந்த Infinix Hot 8 ஸ்மார்ட்போன் 6,999 ரூபாய் என்ற சிறப்பு விலையிலேயே விற்பனையாகவுள்ளது.
Infinix Hot 8 ஸ்மார்ட்போன் வாட்டர்-ட்ராப் நாட்ச் திரையை கொண்டுள்ளது.
Infinix Hot 8 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 3 பின்புற கேமரா, 5,000mAh பேட்டரி, LED ஃப்ளாஷ் வசதியுடன் 8 மெகாபிக்சல் முன்புற கேமரா, மிகப்பெரிய 6.52-இன்ச் திரை, வாட்டர்-ட்ராப் நாட்ச் என பல அட்டகாசமான சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. இத்தனை அம்சங்களை கொண்ட ஒரு ஸ்மார்ட்போன், பட்ஜெட் போன்களின் விலை பட்டியலில் அறிமுகமாகியுள்ளது என்பது தனிச்சிறப்பு. இரண்டு வண்ணங்களில் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன், அறிமுக சலுகையாக குறைக்கப்பட்ட விலையிலேயே அக்டோபர் 30 வரை விற்பனையாகவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் முன்னதாக Infinix S4 4GB RAM வகை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு மாதத்தில் அறிமுகமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Infinix Hot 8: இந்திய விலை மற்றும் விற்பனை!
Infinix Hot 8 ஸ்மார்ட்போன் இந்தியாவில் 4GB RAM மற்றும் 64GB சேமிப்பு என்ற ஒரே ஒரு வகையில் மட்டுமே அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 7,999 ரூபாய் என்ற விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அறிமுக சலுகையாக அக்டோபர் 30-ஆம் தேதி வரை, இந்த Infinix Hot 8 ஸ்மார்ட்போன் 6,999 ரூபாய் என்ற சிறப்பு விலையிலேயே விற்பனையாகவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஃப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனையாகிறது. குவெட்சல் சியான் (Quetzal Cyan) மற்றும் காஸ்மிக் ஊதா (Cosmic Purple) என்ற இரண்டு வண்ணங்களில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
ஃப்ளிப்கார்ட் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போன் செப்டம்பர் 12 மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வரும் என்று குறிப்பிட்டுள்ளது. ஆக்சிஸ் வங்கி பஷ் கிரடிட் கார்டுகளுக்கு 10 சதவிகிதம், ஃப்ளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரடிட் கார்டுகளுக்கு 5 சதவிதம் மற்றும் எச்.டி.எஃப்.சி கார்டுகளுக்கு 5 சதவிகிதம் என்று தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி ஈ.எம்.ஐ வசதிகளையும் வழங்கியுள்ளது.
Infinix Hot 8: சிறப்பம்சங்கள்!
இரண்டு நானோ சிம் வசதி கொண்ட Infinix Hot 8 ஸ்மார்ட்போன், XOS 5.0-ஐ மையப்படுத்திய ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பை கொண்டு செயல்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.52-இன்ச் HD+ (720x1600 பிக்சல்கள்) வாட்டர்-ட்ராப் நாட்ச் திரை, 20:9 திரை விகிதம், 500நிட்ஸ் ஒளிர்வு, 90.3 சதவிகித திரை உடல் விகிதம், மற்றும் 2.5D கிளாஸ் பாதுகாப்பு ஆகிய திரை அம்சங்களை கொண்டுள்ளது. 2GHz வேகத்துடன், இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ P22 ஆக்டா-கோர் எஸ்.ஓ.சி ப்ராசஸர் கொண்டு செயல்படுகிறது. 4GB RAM மற்றும் 64GB சேமிப்பு அளவை கொண்ட இந்த ஸ்மார்ட்போனி 256GB வரை சேமிப்பை கூட்டிக்கொள்ளலாம்.
![]()
Infinix Hot 8 13 மெகாபிக்சல் முதன்மை கேமராவை கொண்டுள்ளது.
கேமராவை பொருத்தவரை, Infinix Hot 8 ஸ்மார்ட்போன் 3 பின்புற கேமராக்களை கொண்டுள்ளது - 13 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 2 மெகாபிக்சல் டெப்த் கேமரா மற்றும் ஒரு குறைந்த ஒளிப் படங்களை எடுக்கும் கேமரா. முன்புறத்தை பொருத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் LED ஃப்ளாஷ் வசதி, வாட்டர்-ட்ராப் நாட்ச் திரையுடன் 8 மெகாபிக்சல் கேமராவை கொண்டுள்ளது.
Infinix Hot 8 ஸ்மார்ட்போன் மிகப்பெரிய 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ப்ளூடூத் v5.0, USB OTG, 3.5mm ஆடியோ ஜாக், மைக்ரோ-USB போர்ட் ஆகிய தொடர்பு வசதிகளை கொண்டுள்ளது. Infinix Hot 8 165x76.3x8.7mm ஆகிய அளவுகளுடன் 179 கிராம்கள் எடையை கொண்டுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் பின்புற பிங்கர் பிரின்ட் சென்சார் வசதியையும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் பேஷ் அன்லாக் வசதியும் இடம்பெற்றுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
WhatsApp Working on 'Strict Account Settings' Feature to Protect Users From Cyberattacks: Report
Samsung Galaxy XR Headset Will Reportedly Launch in Additional Markets in 2026
Moto G57 Power With 7,000mAh Battery Launched Alongside Moto G57: Price, Specifications