Huawei Enjoy 20 Plus, Enjoy 20 ஸ்மார்ட்போன்களின் விவரங்கள் கசிந்தன!

விளம்பரம்
Written by மேம்படுத்தப்பட்டது: 29 ஆகஸ்ட் 2020 12:44 IST
ஹைலைட்ஸ்
  • Huawei Enjoy 20 Plus allegedly features MediaTek MT6853 SoC
  • Huawei Enjoy 20 also sport a triple rear camera setup
  • Huawei Enjoy 20 Plus houses a 4,200mAh battery

இதில் செல்பி கேமரா பாப்அப் அம்சத்துடன் இருக்கலாம்

Photo Credit: SlashLeaks

ஹூவாய் நிறுவனத்தின் புத்தம் புதிய ஹூவாய் என்ஜாய் 20 பிளஸ் ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.

ஹூவாய் தரப்பில் புதிதாக ஹூவாய் என்ஜாய் 20 பிளஸ் என்ற ஸ்மார்ட்போனின் செப்டம்பர் 3 ஆம் தேதி அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்,ஸ்லஷ்லீக்ஸ் என்ற தளத்தில், ஹூவாய் என்ஜாய் 20 பிளஸ் ஸ்மார்ட்போனின் படங்கள் வெளியாகியுள்ளது. 

6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி, 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என மொத்தம் இரண்டு வேரியண்டுகளில் என்ஜாய் 20 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாக உள்ளது. இருப்பினும் இதன் விலை குறித்த விவரங்கள் தெரியவில்லை. இது குறித்து ஹூவாய் தரப்பில் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

ஹூவாய் என்ஜாய் 20 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் MT6853 பிராசசர் எதிர்பார்க்கப்படுகிறது
Photo Credit: SlashLeaks

கேமராவைப் பொறுத்தவரையில் 48 மெகாபிக்சலுடன் பிரைமரி கேமரா உள்ளது. இதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் 8MP செகண்டரி கேமரா, 2MP மற்றொரு கேமரா இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சலுடன் கூடிய பாப்அப் செல்பி கேமரா இருக்கலாம்.

6.5 இன்ச் அளவிலான பெரிய எல்சிடி திரை, 1080x2400 பிக்சல், மீடியாடெக் ஹீலியோ MT6853 SoC பிராசசர், 4,200mAh சக்தி கொண்ட பேட்டரி, அதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் 40W சக்தி கொண்ட பேட்டரி,  USB-C போர்ட் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. .

ஹூவாய் என்ஜாய் 20 ஸ்மார்ட்போனில் ட்ரிப்பிள் கேமரா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Photo Credit: SlashLeaks


Redmi Note 8 or Realme 5s: Which is the best phone under Rs. 10,000 in India right now? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Starlink நெட்வொர்க் வருது! ஆனா மாசம் ₹4,000 கட்டணுமா? Starlink-ன் முக்கியமான விளக்கம்! வதந்திகளை நம்பாதீங்க
  2. Apple Watch யூஸர்களுக்கு ஒரு ட்ரீட்! Fitness+ வருது! Workouts, Guided Meditation, Time to Walk – எல்லாம் ஒரே ஆப்ல
  3. புது Smartwatch வேணுமா? OnePlus Watch Lite வருது! ₹5,000-க்குள் இந்த அம்சங்கள் சான்ஸே இல்லை
  4. Insta-ல ஒரு மாஸ் அப்டேட்! உங்க ஃபேவரைட் ஸ்டோரிஸ இனி சுலபமா ரீஷேர் பண்ணலாம்! செக் பண்ணுங்க
  5. புது Narzo 90 டிசைன் லீக்! ₹15,000 ரேஞ்சில் 6000mAh பேட்டரி, 120Hz டிஸ்பிளே! நீங்க வாங்குவீங்களா?
  6. Vivo S50 சீரிஸ் வருது! Mini போன் பிரியர்களுக்கு கொண்டாட்டம்! Snapdragon 8 Gen 5, 90W சார்ஜிங்! விலை கம்மியா இருக்குமா?
  7. ChatGPT-ல விளம்பரம் வந்ததா? OpenAI மறுப்பு! நீங்க நம்புவீங்களா? Plus யூஸர்கள் நிம்மதி அடையலாமா?
  8. Nothing போன் யூஸர்களுக்கு ஒரு பேட் நியூஸ்! OS 4.0 அப்டேட் இப்போ கிடைக்காது! பெரிய பக் வந்திருக்கா?
  9. குறைஞ்ச விலையில பவர்ஃபுல் 5G போனா? Realme Narzo 90 சீரிஸ் வருது! Amazon-ல் விற்பனை! எந்தெந்த மாடல்ஸ்?
  10. iPhone 16: ₹65,900 எஃபெக்டிவ் விலையில் வாங்க சூப்பர் டீல்!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.