6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி, 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என மொத்தம் இரண்டு வேரியண்டுகளில் என்ஜாய் 20 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாக உள்ளது.
Photo Credit: SlashLeaks
இதில் செல்பி கேமரா பாப்அப் அம்சத்துடன் இருக்கலாம்
ஹூவாய் நிறுவனத்தின் புத்தம் புதிய ஹூவாய் என்ஜாய் 20 பிளஸ் ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.
ஹூவாய் தரப்பில் புதிதாக ஹூவாய் என்ஜாய் 20 பிளஸ் என்ற ஸ்மார்ட்போனின் செப்டம்பர் 3 ஆம் தேதி அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்,ஸ்லஷ்லீக்ஸ் என்ற தளத்தில், ஹூவாய் என்ஜாய் 20 பிளஸ் ஸ்மார்ட்போனின் படங்கள் வெளியாகியுள்ளது.
6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி, 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என மொத்தம் இரண்டு வேரியண்டுகளில் என்ஜாய் 20 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாக உள்ளது. இருப்பினும் இதன் விலை குறித்த விவரங்கள் தெரியவில்லை. இது குறித்து ஹூவாய் தரப்பில் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
![]()
ஹூவாய் என்ஜாய் 20 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் MT6853 பிராசசர் எதிர்பார்க்கப்படுகிறது
Photo Credit: SlashLeaks
கேமராவைப் பொறுத்தவரையில் 48 மெகாபிக்சலுடன் பிரைமரி கேமரா உள்ளது. இதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் 8MP செகண்டரி கேமரா, 2MP மற்றொரு கேமரா இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சலுடன் கூடிய பாப்அப் செல்பி கேமரா இருக்கலாம்.
6.5 இன்ச் அளவிலான பெரிய எல்சிடி திரை, 1080x2400 பிக்சல், மீடியாடெக் ஹீலியோ MT6853 SoC பிராசசர், 4,200mAh சக்தி கொண்ட பேட்டரி, அதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் 40W சக்தி கொண்ட பேட்டரி, USB-C போர்ட் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. .
![]()
ஹூவாய் என்ஜாய் 20 ஸ்மார்ட்போனில் ட்ரிப்பிள் கேமரா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Photo Credit: SlashLeaks
Redmi Note 8 or Realme 5s: Which is the best phone under Rs. 10,000 in India right now? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
MIT Physicists Discover a Way to See Inside Atoms Using Tabletop Molecular Technique
Saturn’s Icy Moon Enceladus Organic Molecules May Have Been Fromed by Cosmic Rays, Scientists Find
Researchers Use AI to Predict Storm Surges Faster and More Accurately
Accused Now Streaming On OTT: Know Where to Watch This Tamil Drama Movie Online