எட்ஜ் ப்ரோடெக்ஷன் மற்றும் வழுக்காத தளம் கொண்ட இந்த வயர்லெஸ் சார்ஜர், 10W சார்ஜிங் அளவை கொண்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் ஹூவாய் நிறுவனம் சார்பில் P30 வரிசை போன்கள் வெளியாகினர். அதில் வெளியான போன்களுக்கு வயர்லெஸ் சார்ஜிங் பேட் வழங்கப்பட்ட நிலையில் ஹூவாய் P30 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு மட்டும் அறிமுகம் செய்யப்படவில்லை.
இந்நிலையில் தற்போது ஹூவாய் நிறுவனம் சார்பில் பிரத்யேக வயர்லெஸ் சார்ஜிங் பேட், ஹூவாய் P30 ப்ரோ போனுடன் அறிமுகம் செய்துள்ளது. எட்ஜ் ப்ரோடெக்ஷன் மற்றும் வழுக்காத தளம் கொண்ட இந்த வயர்லெஸ் சார்ஜர், 10W சார்ஜிங் அளவை கொண்டுள்ளது.
இந்த வயர்லெஸ் சார்ஜிங் பேடின் விலை பற்றிய தகவல் இன்னும் கசியாத நிலையில் அதன் விற்பனை தேதியும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஹூவாய் P30 கேஸ் (ஆரஞ்சு மற்றும் டர்குவாய்ஸ்) என இரண்டு நிறங்களில் வெளியாகுகிறது. மேலும் இந்த சார்ஜிங் பேடில் காந்தத்தை கொண்டுள்ளதால் போன் வழுக்கிச்செல்லாமல் பாதுகாப்பாக வைத்துக்கொள்கிறது.
இந்த புதிய ஸ்மார்ட்போன்களுடன் ஹூவாய் நிறுவனம் சார்பில் ஃபிரீ லேஸ் (FreeLace), ஃபிரீ பட்ஸ் லையிட் (FreeBuds Lite), வாட்ச் ஜிடி எலிகென்ட், வாட்ச் ஜிடி ஆக்டிவ் மற்றும் 12,000mAh பவர் பேங் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் கிரீண் 710 SoC-யால் பவரூட்டப்பட்டுள்ள ஹூவாய் P30 லையிட் ஸ்மார்ட்போன் பிலிப்பைன்சில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Vivo V70 Series India Launch Timeline Leaked; Two Models Expected to Debut