ஹூவாய் P30 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்ட சில நாட்களிலேயே மென்பொருள் அப்டேட்டைப் பெற்றுள்ளது. இந்த புதிய அப்டேட்டில் கேமரா, ஃபிங்கர் பிரின்ட் சென்சார் மற்றும் ஆடியோ செட்டிங் போன்றவற்றை மாற்ற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போன் தற்போது முன்பதிவுக்கு சில நாடுகளில் வெளியாகியுள்ள நிலையில் இந்த அப்டேட்டும் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த அப்டேட்டைப் பெறுவதற்கு 404 எம்பி டேட்டா தேவைப்படும் என்றும் இதன் மூலம் போனை வாங்கியுடனே ஒரு அப்டேட்டைப் பெற வேண்டியதிருக்கும் எனவும் கூறப்படுகிறது.
ஹூவாய் P30 ப்ரோ அமைப்புகள்:
ஹூவாய் P30 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9.0 பைய் மென்பொருள் கொண்டு இயங்குகிறது. 6.47 முழு ஹெச்டி திரைகொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆக்டாகோர் கிரீன் 980 SoC பிராசஸர் மற்றும் 8ஜிபி ரேம்/ 512ஜிபி சேமிப்பு வசதியையும் பெற்றுள்ளது.
மேலும் இந்த போனில் நான்கு கேமராக்கள் இடம் பெற்றுள்ளன. 40 மெகா பிக்சல் கொண்ட முதற்கட்ட கேமரா, 20 மெகா பிக்சல் கொண்ட இரண்டாம் நிலை கேமரா மற்றும் 8 மெகா பிக்சல் கேமாரவும் இடம் பெற்றுள்ளன. மேலும் செல்ஃபிகளுக்காக 32 மெகா பிக்சல் கேமராவும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. பேட்டரி வசதியைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போனில் 4,200mAh பவர் கொண்ட பேட்டரி இடம் பெற்றுள்ளது. அதுபோல் இந்த போனுடன் வயர்லெஸ் சார்ஜிங் வசதியையும் பெற முடியும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்