Photo Credit: ட்விட்டர்
ஹூவாய் நிறுவன தயாரிப்புகளான ஹூவாய் P30, P30 ப்ரோ மற்றும் P30 லைட் ஸ்மார்ட்போன்கள் இன்று மாலை பாரீஸ் நகரத்தில் அறிமுகமாக உள்ளது. இந்த P30 தயாரிப்புகள் கிரிண் 980 SoC-யை கொண்டிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. மேலும் வெளியாகியுள்ள தகவல்படி, ஹூவாய் நிறுவனம் சார்பில் இரண்டு ஸ்மார்ட் வாட்சுகள், வயர்லெஸ் சார்ஜங் பேட் மற்றும் ஒரு ஸ்மார்ட் ஸ்பீக்கர் போன்ற தயாரிப்புகளும் இன்று வெளியாகக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரீஸில் நடக்கவிருக்கும் இந்த அறிமுக விழா, ஹூவாய் நிறுவனத்தின் யுடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
ஹூவாய் P30 வரிசை தயாரிப்புகளின் எதிர்பார்கப்படும் விலைப் பட்டியல்:
இந்த தயாரிப்புகளின் விலை குறித்து இதுவரை பல தகவல் கசிவுகள் வெளியாகியுள்ள நிலையில் அமேசான் சார்பில் வெளியாகியுள்ள தகவலின்படி, ஹூவாய் P30 ப்ரோ 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பு வசதிகொண்ட மாடல் ரூ.80,000 வரை விற்பனை செய்யப்படலாம் என்றும், ஹூவாய் P30 ப்ரோ போனின் 6ஜிபி ரேம்/128ஜிபி சேமிப்பு வசதி கொண்ட மாடல் ஸ்மார்ட்போன் ரூ.78,000 வரை விற்பனை செய்யப்படலாம் என்றும் எதிர்பார்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போனின் மற்றொரு மாடலான 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி சேமிப்பு வசதிவுடைய மாடல் ரூ.86,000 வரை விற்பனை செய்யப்படலாம்.
இந்நிலையில் மற்றொரு தகவலின்படி, ஹூவாயின் P30 ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பு வசதிகொண்ட மாடல் ரூ.58,500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படலாம் என கணிப்பு. இந்த வரிசையின் மற்றொரு தயாரிப்பான P30 லைட் குறித்தத் தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
ஹூவாய் P30 எதிர்பார்கப்படும் அமைப்புகள்:
ஏற்கெனவே குறிப்பிட்டது போல் இந்த P30 தயாரிப்புகள் கிரிண் 980 SoC-யை கொண்டிருப்பதாக பலதரப்பட்ட தளங்கள் தகவல் கூறுகின்றன. அதுமட்டுமின்றி ஆண்ட்ராய்டு பைய் மென்பொருள், 6.47 இஞ்ச் ஹெச்டி திரை மற்றும் ஓலெட் திரையும் இந்த போன் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் வளைந்த திரை மற்றும் வாட்டர் டிராப் நாட்ச் வசதியைப் பெற்றிருக்கலாம் எனவும் தகவல்.
மேகரா அமைப்புகளைப் பொறுத்தவரை ஹூவாய் P30 ப்ரோ ஸ்மார்ட்போன் நான்கு பின்புற கேமராக்களை கொண்டிருக்கலாம். அதில் 40 மெகா-பிக்சல் கேமரா சென்சார் இடம் பெற்றுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது. மேலும் இதில் ToF கேமாரா சென்சாரும் இடம் பெற்றுள்ளது.
ஹூவாய் P30 ஸ்மார்ட்போனை பொறுத்தவரை பின்புறத்தில் மூன்ற கேமராக்கள் இடம் பெற்றுள்ளது. அதில் 40,16 மற்றும் 8 சென்சார்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்.
மேலும் இந்த ஹூவாய் P30 ப்ரோ போனின் பேட்டரி வசதியைப் பொறுத்தவரை இந்த போனில் 4200mAh பவர் இருக்கலாம். ஹூவாய் P30 போனில் 3,650mAh பேட்டரி பவர் இருக்க வாய்ப்பு.
இப்படி போனின் பொரும்பான்மையான தகவல்கள் வெளியாகிய நிலையில் போனை பற்றிய முழு தகவல்கள் இன்று மாலை வெளியாகிவிடும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்