ஹூவாய் நிறுவனம் சார்பில் நேற்று பாரிஸ் நகரத்தில் நடந்த ஒரு விழாவில் P30 வரிசை ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டனர். ஆனால் ஹூவாய் P30 லையிட் வகை ஸ்மார்ட்போன் இந்த அறிமுக விழாவில் இடம்பெறாத நிலையில் பிலிப்பைன்சில் இன்று முன்பதிவுக்கு வெளியாகியுள்ளது.
இந்த தயாரிப்பு ஹூவாய் நிறுவனத்தின் P30, P30 ப்ரோ போன்களை போல் மூன்று பின்புற கேமராக்களை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஹைசிலிக்கான் கிரீண் 710 SoC மற்றும் வாட்டர் டிராப் ஸ்டையில் நாட்ச் வசதியை கொண்டுள்ளது.
ஹூவாய் P30 லையிட் விலை:
தற்போதைக்கு பிலிப்பைன்சில் மட்டுமே இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ள நிலையில் ரூ.22,200 மதிப்புடையது. மேலும் இந்த ஹூவாய் P30 லைட் ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், பீகாக் புளூ மற்றும் பியேரல் வைட் நிறங்களில் வெளியாகுகிறது.
ஏப்ரல் 4 ஆம் தேதி விற்பனையை துவங்கும் இந்த ஸ்மார்ட்போன் அமேசான் மற்றும் ஷாபீ தளங்களில் தற்போதைக்கு முன்பதிவை துவங்கியுள்ளது. இந்த தயாரிப்புடன் 8ஜிபி ரேம்/ 512ஜிபி சேமிப்பு வசதிகொண்ட ஹூவாய் P30 மற்றும் ஹூவாய் P30 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் ரூ.62,200 வரை விற்பனை செய்யப்படவுள்ளது.
ஹூவாய் P30 லைட் அமைப்புகள்:
ஹூவாய் நிறுவனத்தின் சார்பல் பிலிப்பைன்சில் வெளியான இந்த ஹூவாய் P30 லையிட் ஆண்டுராய்டு 9 பைய் அப்டேட் 6.5 இஞ்ச் ஹெச்டி திரையுள்ளது. மேலும் ஹையசிலிக்கான் கிரீண் 710 SoC மற்றும் வாட்டர் டிராப் ஸ்டையில் நாட்ச் வசதியை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
6 ரேம் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் பின்புற கேமராவில் 24, 8 மற்றும் 2 மெகா பிக்சலை கொண்டுள்ளது. அதுபோல் 32 மெகா பிக்சல் முன்புற கேமரா சென்சாரை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சேமிப்பு வசதியை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போனில் 128 ஜிபி இடம்பெற்றுள்ளது. மேலும் பின்புறத்தில் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் 3,340mAh பேட்டரி வசதி போன்ற பல அம்சங்களை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்