அமேசானில் விற்பனையைத் தொடங்கிய ‘ஹூவேய் P30 லைட்’; விலை, ஆஃபர் என்ன?

அமேசானில் விற்பனையைத் தொடங்கிய ‘ஹூவேய் P30 லைட்’; விலை, ஆஃபர் என்ன?

போனின் பின்புறத்தில் ஃபிங்கர் பிரின்ட் சென்சார் வடிவமைக்கப்பட்டுள்ளது

ஹைலைட்ஸ்
  • இரு வகை ரேம் வகைகள் கொண்டு P30 லைட் வந்துள்ளது
  • ரூ.19,990 இலிருந்து இந்த போனின் விலை ஆரம்பமாகிறது
  • அமேசான் இந்தியா தளத்தில் இந்த போனை வாங்கலாம்
விளம்பரம்

அமேசான் இணையதளத்தில் இன்று முதல் விற்பனையைத் தொடங்குகிறது ஹூவேய் P30 லைட் ஸ்மார்ட் போன். இந்த மாதத் தொடக்கத்தில் ஹூவேய் நிறுவனம், P30 ப்ரோ போனுடன் P30 லைட் போனை அறிமுகம் செய்தது. ஹூவேய் P30 லைட் போனில், 32 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா, 3 ரியர் கேமரா, 6.15 இன்ச் முழு எச்.டி+ திரை உள்ளிட்ட அம்சங்கள் இருக்கின்றன. தற்போதைக்கு இந்த போன் அமேசான்.இன், க்ரோமா கடைகளில் மட்டும்தான் கிடைக்கும். 

ஹூவேய் P30 லைட் விலை, தள்ளுபடி:

ஹூவேய் P30 லைட் போனின் 4ஜிபி ரேம் + 12ஜிபி சேமிப்பு வசதி கொண்ட வகை 19,990 ரூபாய்க்கு விற்கப்படும். 6ஜிபி + 128 ஜிபி வகை 22,990 ரூபாய்க்கு விற்கப்படும். மிட்நைட் கருப்பு, மயில் நீலம் உள்ளிட்ட வண்ணங்களில் இந்த போன் விற்பனை செய்யப்படும். ஆரம்ப விற்பனையாக ஹூவேய் நிறுவனம், நோ-காஸ்ட் இ.எம்.ஐ, 2,200 வரை ஜியோ கேஷ்-பேக், 2.2டிபி கூடுதல் டேட்டா உள்ளிட்ட தள்ளுபடிகளை தருகிறது. 

ஹூவேய் P30 லைட் சிறப்பம்சங்கள்:

டூயல் நானோ சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 9.0 பைய் மென்பொருள், 6.15 இன்ச் முழு எச்.டி+ எல்.சி.டி திரை, 19.3:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ உள்ளிட்ட வசதிகளை P30 லைட் கொண்டுள்ளன. ஆக்டா-கோர் ஹில்சிலிகான் கிரின் 710 எஸ்.ஓ.சி ப்ராசஸர் மூலம் இந்த போன் இயங்குகிறது. 4ஜிபி மற்றும் 6ஜிபி ரேம் வகைகளில் இந்த போனை வாங்கலாம். 

போனின் பின்புறம் மூன்று கேமராக்கள் இருக்கும். 24 மெகா பிக்சல் கொண்ட முதன்மை கேமரா, 8 மெகா பிக்சல் கொண்ட இரண்டாவது கேமரா, 2 மெகா பிக்சல் கொண்ட டெப்த் சென்சார் ஆகிய திறன்களை கொண்டிருக்கும். போனின் முன்புறம் செல்ஃபிகளுக்காக 32 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 128ஜிபி சேமிப்பு வசதி இந்த போனுடன் வரும். 256 ஜிபி வரை சேமிப்பு வசதியை விரிவாக்கிக் கொள்ளலாம். 

4G VoLTE, வை-ஃபை 802.11 b/g/n/ac, ப்ளூடூத் v5.0, GPS/ A-GPS, யூஎஸ்பி Type-C, and எப்.எம் ரேடியோ உள்ளிட்ட இணைப்பு வசிகளை ஹூவேய் P30 லைட் பெற்றிருக்கிறது. போனின் பின்புறத்தில் ஃபிங்கர் பிரின்ட் சென்சார் வடிவமைக்கப்பட்டுள்ளது. 3,340 எம்.ஏ.எச் பேட்டரி மூலம் ஹூவேய் P30 லைட் பவரூட்டப்பட்டுள்ளது. இந்த பேட்டரியின் மூலம் 21 மணி நேரம் பேச முடியும் என்றும், 12 மணி நேரம் ஸ்டாண்டு-பை நேரம் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
 
 

விளம்பரம்

விளம்பரம்

© Copyright Red Pixels Ventures Limited 2024. All rights reserved.
Trending Products »
Latest Tech News »