Huawei ஒரு புதிய mid-range தொலைபேசி பேக்கிங்கில் மூன்று பின்புற கேமராக்கள் மற்றும் in-display fingerprint சென்சார் ஆகியவற்றை அறிமுகப்படுத்த உள்ளது. அதன் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாக, வரவிருக்கும் Huawei தொலைபேசி TENAA-வில் காணப்பட்டது.
அதன் முக்கிய விவரக்குறிப்புகளான 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 16 மெகாபிக்சல் முன் கேமரா மற்றும் octa-core processor ஆகியவற்றைக் குறிக்கிறது. Huawei P Smart (2020) என அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த போனைப் பற்றி இன்னும் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி இல்லை. கடந்த ஆண்டு டிசம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட Huawei P Smart (2019) வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரவிருக்கும் Huawei தொலைபேசி, அதன் TENAA பட்டியலை முதன்முதலில் NashvilleChatter கண்டுபிடித்தது. TENAA தரவுத்தளத்தில் AQM-AL00 மற்றும் AQM-TL00 ஆகிய இரண்டு வெவ்வேறு மாதிரியான பெயர்களில் பட்டியலிடப்பட்டுள்ளது - ஒரே மாதிரியான விவரக்குறிப்புகள், ஆனால் தயாரிப்பு படங்கள் இல்லை.
சீன ஒழுங்குமுறை ஆணையத்தின் தரவுத்தளத்தின்படி, வரவிருக்கும் Huawei போனில் 6.3-inch full-HD+ (1080x2400 pixels) OLED டிஸ்பிளே இடம்பெறும். மேலும் இது 2.2GHz கடிகாரத்தில் உள்ள octa-core processor மூலம் இயக்கப்படும்.
கேமராக்களைப் பொறுத்தவரை, இன்னும் தொடங்கப்படாத Huawei போனில் 8 மெகாபிக்சல் secondary மற்றும் 2 மெகாபிக்சல் tertiary snappers உதவியுடன், 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா பொருத்தப்பட்டு வெளிவரும். அதேபோல முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் கேமரா உள்ளது .
இந்த தொலைபேசி 4 ஜிபி, 6 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம் மாறுபாட்டிலும் மற்றும் 64 ஜிபி மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல்களுடன் பல வகைகளில் வரும். Huawei P Smart (2020) Android 9 Pie-யுடன் இயங்குவதோடு 256 ஜிபி வரை சேமிப்பு விரிவாக்கத்தை வழங்கும். TENAA-வின் Huawei AQM-AL00 மற்றும் AQM-TL00 ஆகிய இரண்டும் ஒரே தொலைபேசியில் தோன்றும். இதில் 3,900mAh பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் என்றும் கருப்பு மற்றும் பச்சை நிறங்களில் கிடைக்கும் என்றும் குறிப்பிடுகிறது.
Huawei P Smart (2020)-யின் பரிமாணங்கள் 157.4 x 73.2 x 7.75mm மற்றும் 163 கிராம் எடை என்று பட்டியலிடப்பட்டுள்ளன. ஆன்போர்டு சென்சார்களில் ஒரு accelerometer, ambient light sensor, proximity sensor மற்றும் அங்கீகாரத்திற்கு in-display fingerprint சென்சார் ஆகியவை அடங்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்