சீன மைக்ரோ பிளாக்கிங் வலைத்தளமான வெய்போவின் அறிக்கையின்படி, Huawei Nova 7 ஏப்ரல் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பதிவில் குறிப்பிட்டுள்ளபடி, மார்ச் 26 அன்று பாரிஸில் நிறுவனத்தின் Huawei P40 சீரிஸ் வெளியான பின்னர் இந்த வெளியீடு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, சீன தொலைத் தொடர்பு நிறுவனத்திடமிருந்து போனைப் பற்றி அதிகம் தெரியவில்லை, ஆனால் ஒரு அறிக்கை Kirin 990 SoC உடன் Huawei Nova 7 வர உள்ளது என்று எதிர்பார்க்கிறது. இது 5 ஜி பிராசசர் ஆகும்.
பதிவரின் பதிவின்படி, ஏப்ரல் 2-ஆம் தேதி Huawei உள்நாட்டில் ஒரு மாநாட்டை நடத்தி, விரைவில் நோவா 7-ஐ அறிவிக்கும். கடந்த ஆண்டு டிசம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட நோவா 6-ன் புரோ வேரியண்ட்டை நிறுவனம் அறிமுகப்படுத்தாது என்று பதிவர் கூறுகிறார், அதற்கு பதிலாக, இது Huawei Nova 7-ஐ கொண்டு வருகிறது.
இதற்கிடையில், Huawei P40 சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஹவாய் வியாழக்கிழமை ஸ்பெயினில் Huawei P40 Lite-ஐ வெளியிட்டது. இந்த போன் Huawei Nova 6 SE-ன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாகத் தோன்றுகிறது மற்றும் குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. Huawei P40 Lite, HiSilicon Kirin 810 SoC-யால் இயக்கப்படுகிறது.
இதேபோல், சீன தொலைத் தொடர்பு நிறுவனம் Huawei Nova 7i-ஐ இந்த மாத தொடக்கத்தில் வெளியிட்டது, மேலும் இது 6.40 அங்குல தொடுதிரை டிஸ்பிளேவுடன் வருகிறது. இந்த போன் ஆக்டா கோர் ஹைசிலிகான் கிரின் 810 SoC-யால் இயக்கப்படுகிறது, இதில் 2.27GHz வேகத்தில் இரண்டு கோர்களும், 1.88GHz வேகத்தில் ஆறு கோர்களும் உள்ளன. இதன் 6 ஜிபி + 128 ஜிபி வேரியண்டின் விலை MYR 1,099 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.18,900) என்று கூறப்படுகிறது.
டிசம்பர் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில், Huawei Nova 6 மேலும் இரண்டு வேரியண்டுகளுடன் வந்தது - Nova 6 SE மற்றும் Nova 6 5G. Nova 6 மற்றும் Nova 6 5G ஸ்மார்ட்போன்கள் இரண்டும் ஒரே மாதிரியான விவரக்குறிப்புகளுடன் வந்தன. Nova 6-ன் விலை CNY 3,199 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.32,400), 5ஜி வேரியண்ட் CNY 3,799 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.38,400) என அறிவிக்கப்பட்டது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்