ஹவாய் நிறுவனத்தின் மூன்று நோவா 7 சீரிஸ் போன்கள் சீனாவில் அறிமுகமாகியுள்ளது. - Huawei Nova 7 Pro 5G, Huawei Nova 7 5G மற்றும் Huawei Nova 7 SE 5G. மூன்று புதிய போன்களும் பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்புகளுடன் வந்துள்ளன. ஹவாய் நோவா 7-சீரிஸ் போன்கள் ஏப்ரல் 28 ஆம் தேதி சீனாவில் விற்பனைக்கு வரும்.
போனின் 8 ஜிபி + 128 ஜிபி மாடலின் விலை சிஎன்ஒய் 3,699 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.39,600),
8 ஜிபி + 256 ஜிபி மாடலின் விலை சிஎன்ஒய் 4,099 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.43,900) ஆகும்.
இந்த போன் மிட்நைட் பிளாக், சில்வர், ஃபாரஸ்ட் கிரீன், மிட்சம்மர் பர்பில் மற்றும் ஹனி ரெட் கலர் ஆப்ஷன்களில் வருகிறது.
போனின் 8 ஜிபி + 128 ஜிபி மாடலின் விலை சிஎன்ஒய் 2,999 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.32,100),
8 ஜிபி + 256 ஜிபி ஆப்ஷனின் விலை சிஎன்ஒய் 3,399 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.36,400) ஆகும்.
இந்த போனும் மிட்நைட் பிளாக், சில்வர், ஃபாரஸ்ட் கிரீன், மிட்சம்மர் பர்பில் மற்றும் ஹனி ரெட் கலர் ஆப்ஷன்களில் வருகிறது.
போனின் 8 ஜிபி + 128 ஜிபி ஆப்ஷனின் விலை சிஎன்ஒய் 2,399 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.25,700),
8 ஜிபி + 256 ஜிபி மாடலின் விலை சிஎன்ஒய் 2,799 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.30,000) ஆகும்.
இந்த போன் மிட்நைட் பிளாக், சில்வர், ஃபாரஸ்ட் கிரீன் மற்றும் மிட்சம்மர் பர்பில் வண்ணங்களில் மட்டுமே வருகிறது.
இந்த போன் டூயல்-சிம் (நானோ) ஸ்லாட்டைக் கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 10 அடிப்படையாகக் கொண்ட EMUI 10.1-ல் இயங்குகிறது. இந்த போன் 6.57 அங்குல முழு எச்டி + (1,080x2,340 பிக்சல்கள்) OLED வளைந்த டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது 8 ஜிபி ரேம் உடன் ஹைசிலிகான் கிரின் 985 5 ஜி சோசி மூலம் இயக்கப்படுகிறது.
போனில், 64 மெகாபிக்சல் பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா, 8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா உள்ளது. டெலிஃபோட்டோ ஷூட்டர் 5 எக்ஸ் ஆப்டிகல் ஜூம், 10 எக்ஸ் ஹைப்ரிட் ஜூம் மற்றும் 50 எக்ஸ் டிஜிட்டல் ஜூம் ஆகியவற்றை வழங்குகிறது. மேலும், 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமராவும் உள்ளது. முன்பக்கத்தில், 32 மெகாபிக்சல் செல்பி கேமராவும், 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஷூட்டரும் உள்ளன.
போனில் 256 ஜிபி வரை ஆன்போர்டு ஸ்டோரேஜ் உள்ளது. இது 40W சூப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. இணைப்பு விருப்பங்களில் 5 ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி 5.1, என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் மற்றும் பல உள்ளன. போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளது. இது 160.36x73.74x7.98 மிமீ அளவு மற்றும் 176 கிராம் எடையுள்ளதாக இருக்கும்.
இந்த போன் சிறிய 6.53 அங்குல முழு எச்டி + (1,080x2,340 பிக்சல்கள்) OLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது ஹைசிலிகான் கிரின் 985 5 ஜி சோசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த போன் 8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா 3x ஆப்டிகல் ஜூம், 5 எக்ஸ் ஹைப்ரிட் ஜூம் மற்றும் 20 எக்ஸ் டிஜிட்டல் ஜூம் ஆகியவற்றை ஆதரிக்கிறது. முன்பக்கத்தில், ஒற்றை 32 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது.
ஹவாய் நோவா 7 5 ஜி 160.64x74.33x7.96 மிமீ அளவு மற்றும் 180 கிராம் எடையும் கொண்டது. மற்ற விவரக்குறிப்புகள் அனைத்தும் ஹவாய் நோவா 7 5 ஜி புரோ மாடலுடன் இணையானவை.
இந்த போன், 6.5 அங்குல முழு எச்டி + (1,080x2,400 பிக்சல்கள்) எல்சிடி டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இது ஹைசிலிகான் கிரின் 820 5 ஜி SoC-யால் இயக்கப்படுகிறது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரை ஸ்டோரேஜ் ஆப்ஷன்களைக் கொண்டுள்ளது.
கேமரா அமைப்பில், 64 மெகாபிக்சல் பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் கேமரா ஆகியவை அடங்கும். முன்பக்கத்தில், 16 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது.
இந்த போனும் 4,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. இதில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது. இந்த மாடலில் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளது. இந்த போன் 162.31x75.0x8.5 மிமீ அளவு மற்றும் 189 கிராம் எடையைக் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்