Huawei Nova 5z-ன் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரெஜின் விலை CNY 1,599 (சுமார் ரூ. 16,000)-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Huawei Nova 5z, octa-core HiSilicon Kirin 810 SoC-யால் இயக்கப்படுகிறது
இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகமான Nova 5i Proவின் மலிவான மாறுபாடாக சீனாவில் Huawei Nova 5z அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய Huawei Nova போனானது hole-punch டிஸ்பிளே வடிவமைப்புடன், quad rear கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.
Huawei Nova 5z-விலை:
Huawei Nova 5z-ன் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரெஜின் விலை CNY 1,599 (சுமார் ரூ. 16,000)-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜின் விலை CNY 1,799 (சுமார் ரூ .18,000)-யாக விலையிடப்பட்டுள்ளது. இரண்டு வகைகளும் தற்போது சீனாவில் VMall மூலம் முன்பதிவு செய்ய நவம்பர் 1 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஸ்மார்ட்போன் கருப்பு, நீலம் மற்றும் பச்சை நிறங்களில் வருகிறது.
Huawei Nova 5z உலகளாவிய வெளியீடு குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
Huawei Nova 5z-சிறப்பம்சங்கள்:
டூயல்-சிம் (நானோ) Huawei Nova 5z EMUI 9.1 உடன் Android 9 Pie-யால் இயங்குகிறது. 6.26-inch full-HD+ (1080x2340 pixels) டிஸ்பிளேவுடன் 19.5:9 aspect ratio மற்றும் DCI-P3 wide colour gamut ஆகிய அம்சங்கள் உள்ளன. ஹூட்டின் படி, 8GB RAM உடன் இணைக்கப்பட்டு octa-core HiSilicon Kirin 810 SoC-யால் இந்த போன் இயக்கப்படுகிறது.
புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு, Huawei Nova 5z-ல் f/1.8 lens உடன் 48-megapixel முதன்மை சென்சார் மற்றும் wide-angle lens உடன் 8-megapixel secondary சென்சார் மற்றும் quad rear கேமரா அமைப்பு ஆகியவை அடங்கும். கேமரா அமைப்பில் macro photography மற்றும் depth sensing-கிற்காக two 2-megapixel சென்சார்கள் உள்ளன. மேலும், f/2.0 lens உடன் 32-megapiel செல்ஃபி கேமரா உள்ளது.
Nova 5z, 128GB வரை ஆன்போர்ட் ஸ்டோரெஜ் உள்ளது. இது microSD card வழியாக (256GB வரை) விரிவாக்கக்கூடியது. இணைப்பு விருப்பங்களில் 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS மற்றும் USB Type-C ஆகிய அம்சங்கள் இந்த போனில் அடங்கும். accelerometer, ambient light, gyroscope, magnetometer மற்றும் proximity சென்சார் ஆகிய சென்சார் வரிசைகள் அடங்கும். போனின் பின்புறத்தில் fingerprint சென்சார் உள்ளது.
Nova 5z, standard 10v/2A charging உதவியுடன் 4,000mAh பேட்டரியை வழங்குகிறது. தவிர, 156.1x73.9x8.3mm அளவீட்டையும், 178 கிராம் எடையையும் கொண்டது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,590
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹41,061
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999