சீனாவில் அறிமுகமான ஹூவாய் நோவா 4e! தெரிந்துகொள்ள வேண்டியவை!

6.15 இஞ்ச் திரை கொண்ட ஹூவாய் நோவா 4e சீனா மற்றும் மலேசியாவில் வெளியாகவுள்ளது!

சீனாவில் அறிமுகமான ஹூவாய் நோவா 4e! தெரிந்துகொள்ள வேண்டியவை!

ஹூவாய் நோவா 4e ஸ்மார்ட்போன் ரூ.21,000க்கு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்கப்படுகிறது.

ஹைலைட்ஸ்
  • சீனாவில் இன்று அறிமுகம் ஆகிய ஹூவாய் நோவா 4e!
  • மூன்று நிறங்களில் வெளியாகும் ஹூவாய் நோவா 4e!
  • இந்த தயாரிப்பு 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவை கொண்டுள்ளது!
விளம்பரம்

ஹூவாய் நிறுவனம் இன்று தனது தயாரிப்பான ஹூவாய் நோவா 4e ஸ்மார்ட்போனை சீனாவில் இன்று அறிமுகம் செய்துள்ளது. அந்நிறுவனத்தின் பட்ஜெட் போன்களில் ஓன்றான இந்த ஸ்மார்ட்போன் இரண்டு கிளாஸ் பாடியை கொண்டுள்ளது.

பின்புறத்தில் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கொண்ட இந்த போன் 6.15 இஞ்ச் திரையை பெற்றுள்ளது. மேலும் இந்த நோவா 4e மூன்று கேமராக்கள் மற்றும் 32 மெகா பிக்சல் செல்ஃபி கேமராவுடன் வெளியாகுகிறது. சீனாவை தொடர்ந்து இந்த போன் மலேசியாவிலும் அறிமுகமாகியுள்ளது.

ஹூவாய் நோவா 4e, சீனாவில் ரூ.21,000 மதிப்பில் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த விலை நோவா 4e போனின் 4ஜிபி ரேம் மற்றும் 128 சேமிப்பு வசதிகொண்ட மாடலுக்கு பொருந்தும். அதுபோல 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி  தயாரிப்பு ரூ.24,000 மதிப்புக்கு விற்பனை செய்யப்படுகிறது.

சீனாவில் இந்த போனுக்கான முன்பதிவு வரும் மார்ச் 21 ஆம் தேதி துவங்கவுள்ள நிலையில் இந்த தயாரிப்பு கார்லாந்து புளூ, பியர்ல் வையிட் மற்றும் மேஜிக் பிளாக் போன்ற நிறங்களில் வெளியாகவுள்ளது. ஆச்சரியமாக இந்த நோவா 4e (6ஜிபி+128 ஜிபி) போன்கள் சீனாவில் வெளியாவதற்கு முன்னர் மலேசியாவில் வெளியாகவுள்ளது.

ஹூவாய் நோவா 4e அமைப்புகள்:
டூயல் நானோ சிம்கார்ட் வசதிகொண்ட ஹூவாய் நோவா 4e ஸ்மார்ட்போன், 6.15 இஞ்ச் கொண்ட ஹெச்டி திரையை கொண்டுள்ளது. ஆண்டுராய்டு 9 பைய் மூலம் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் ஹைய் சிலிக்கோன் கிரின் 710 பிராசஸ்சரால் இயங்குகிறது.

4 மற்றும் 6 ஜிபி ரேம் மாடலாக வெளியாகும் இந்த ஸ்மார்ட்போன் 128 ஜிபி வரை சேமிப்பு வசதியை கொண்டுள்ளது. மேலும் இந்த போனில் மூன்று பின்புற கேமராக்கள் உள்ள நிலையில் அவைகள் 24/8/2 மெகா பிக்சல் சென்சார்களை கொண்டது.

மேலும் இந்த போனில் இருக்கும் செல்ஃபி கேமரா 32 மெகா பிக்சல் சென்சாருடன் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதர அமைப்புகளுடன் ஹூவாய் நோவா 4e ஸ்மார்ட்போன் 3,340mAh பேட்டரி வசதியை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • KEY SPECS
  • NEWS
Display 6.15-inch
Processor HiSilicon Kirin 710
Front Camera 32-megapixel
Rear Camera 24-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 128GB
Battery Capacity 3340mAh
OS Android Pie
Resolution 1080x2312 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Gadgets 360 Staff

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் ...மேலும்

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. ஜான் டெர்னஸ் தலைமையில் ஆப்பிளின் ஃபோல்டபிள் ஐபேட், AI சாதனங்கள் மற்றும் டச்ஸ்கிரீன் மேக்புக் அறிமுகத் திட்டம்
  2. விவோ X500 ப்ரோ மேக்ஸ்: 200MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ மற்றும் 50MP LOFIC கேமராவுடன் அறிமுகமாக வாய்ப்பு
  3. அறிமுகத்திற்கு முன் கீக்பெஞ்சில் ஷாவோமி 17T: டைமென்சிட்டி 8500 சிப் மற்றும் 12GB RAM விவரங்கள் கசிந்தன
  4. விவோ X போல்ட் 6-ல் 200MP கேமரா மற்றும் பெரிய பேட்டரி; ஷாவோமி மிக்ஸ் போல்ட் 6 வெளியீட்டுத் தகவல் கசிந்தது
  5. போக்கோ C81x 4G vs லாவா போல்ட் N2 ப்ரோ vs ஐடெல் ஜீனோ 100: இந்தியாவில் விலை மற்றும் சிறப்பம்சங்கள் ஒப்பீடு
  6. உங்கள் ஆண்ட்ராய்டு போனில் அட்வான்ஸ்டு ப்ரொடெக்ஷனை எவ்வாறு இயக்குவது: ஒரு படிப்படியான வழிகாட்டி
  7. ரெட்மி A7 ப்ரோ 4G vs விவோ Y05 4G vs ரியல்மி P4 லைட் 4G: இந்தியாவில் விலை மற்றும் சிறப்பம்சங்கள் முழு ஒப்பீடு
  8. உங்கள் சாம்சங் போன் சீராக இயங்க அதனைத் தானாகவே மறுதொடக்கம் (Restart) செய்வது எப்படி?
  9. ஆண்ட்ராய்டின் நோட்டிஃபிகேஷன் பபிள்ஸ் அம்சத்திற்கான ஆதரவை வழங்கும் பணியில் வாட்ஸ்அப் ஈடுபட்டுள்ளது
  10. ஜியோ யூத் அண்ட் கேமிங் பிளான்: ஸ்னாப்சாட்+, ஃபேன்-கோடு மற்றும் ஜெமினி ப்ரோ அறிமுகம்: விலை, நன்மைகள்
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »