ஹுவே நிறுவனத்தின் நோவா சீரிசில் புத்தம்புதிய மாடலான 3i இன்று விற்பனைக்கு வருகிறது. அமேசான் இந்தியா தளத்தின் மூலமாக இது இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் இது பற்றிய அறிமுக அறிவிப்பு வெளியானபோதே இதை வாங்க அனைவரும் முன்பே புக் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போன் 6.3” முழு எச்டி திரை கொண்ட டிஸ்ப்ளே, HiSilicon Kirin 710SoC, EMUI 8.2 (ஓரியோ 8.1), செயற்கை நுண்ணறிவுகொண்ட சீன் ரெகக்னிசன் ஆகிய அம்சங்களைக் கொண்டுள்ளது.
இந்தியாவில் நோவா 3i இன் விலை:
இந்தியச் சந்தை இத்திறன்பேசி 20,990 ரூபாய்க்குக் கிடைக்கும். கருப்பு, பர்ப்பிள் வண்ணங்களில் கிடைக்கிறது. இதனை ஏற்கனவே புக் செய்தவர்களுக்கு அமேசான் 1000ரூபாய் சலுகை அளிக்கிறது. மேலும் எக்ஸ்சேஞ்ச், கூடுதல் கட்டணமில்லா மாதத் தவணைச் சலுகைகள், ஜியோவின் 1200ரூபாய் கேஷ்பேக், 100ஜிபி கூடுதல் டேட்டா ஆகிய சலுகைகளையும் அமேசான் இந்தியா தளத்தில் பெறலாம்.
ஹூவே நோவா 3i திறன் குறிப்பீடுகள் (specifications)
டூயல் சிம் (நானோ), 4ஜிபி ரேம், இரட்டை VoLTE, 6.3” முழு எச்டி திரை கொண்ட டிஸ்ப்ளே (1080*2340 பிக்சல்கள்), HiSilicon Kirin 710SoC, EMUI 8.2 (ஓரியோ 8.1), 19.5:9 அகல உயரத் தகவு, 409ppi பிக்சல் அடர்த்தி. பின்புறத்தில் இரட்டை கேமராக்கள் (16mp, 2mp), எல்ஈடி ஃப்ளாஷ். முன்பக்கத்திலும் இரட்டை கேமரா (24mp, 2mp) உள்ளது.
மெமரியைப் பொருத்தவரை,128 ஜிபியைக் கொண்டுள்ளது இதன் சிறப்பம்சம் ஆகும். மேலும் இதனை கூடுதல் மெமரி கார்டு மூலம் 256 ஜிபி வரை நீட்டித்துக்கொள்ளலாம். 4ஜி VoLTE, 802.11ac வைபை, ப்ளூடூத் v4.2, LE, GPS/A-GPS, GLONASS & USB 2.0 ஆகிய கனக்டிவிட்டி வசதிகளைக் கொண்டுள்ளது. அக்சலரோமீட்டர், ஆம்பியன்ட் லைட் சென்சார், டிஜிட்டல் காம்ப்பஸ், சுழல்காட்டி(gyrometer), நெருங்கமை உணரி (proximity sensor) போன்ற அம்சங்களும் உள்ளன. 3340 mAh பேட்டரி. போனின் அளவு 157.6*75.2*7.6மிமீ.
கடந்த மாதம் புது டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் இத்துடன் நோவா 3 மாடலையும் ஹூவே நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது. எனினும் அது ஆகஸ்ட் 23 அன்றுதான் விற்பனைக்கு வருகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்