இந்திய சந்தைக்குள் குவிந்து கிடக்கும் ஸ்மார்ட்ஃபோன்களில் புதிதாக சேர்ந்துள்ளன, ஹுவாய் நோவா 3 மற்று நோவா 3ஐ. நாட்ச் டிஸ்பிளே மற்றும் வெர்ட்டிக்கல் கேமரா கொண்ட இந்த ஸ்மார்ட்ஃபோன், இன்று டெல்லியில் அறிமுகம் ஆனது.
விலை மற்றும் அறிமுக சலுகைகள்:
6 ஜி.பி ரேம் மற்றும் 128 ஸ்டோரேஜ் கொண்ட நோவா 3 மொபைலின் விலை 34,999 ரூபாய். 4ஜி.பி ரேம் மற்றும் 128 ஜி.பி ஸ்டோரேஜ் கொண்ட நோவா 3ஐ மொபைலின் விலை 20,990 ரூபாய். கருப்பு மற்றும் ஐரிஸ் பர்ப்பிள் நிறங்களில் இரண்டு மொபைல்களுமே விற்பனைக்கு கிடைக்கிறது.
இன்று பிற்பகல் 2 மணி முதல் இரண்டு மொபைல்களுக்கான முன்பதிவும் தொடங்கியது. அறிமுக சலுகைகளாக, 2000 ரூபாய் எக்ஸ்சேஞ் ஆஃபர், கட்டணமில்லா இ.எம்.ஐ, ஜியோவின் 1,200 கேஷ்பேக் மற்றும் 100 ஜி.பி டேட்டாவும் கொடுக்கப்படுகிறது. நோவா 3 ஆகஸ்ட் 23-ம் தேதியும், நோவா 3ஐ ஆகஸ்ட் 7-ம் தேதி விற்பனைக்கு வருகிறது.
ஹுவாய் நோவா 3 சிறப்பம்சங்கள்:
இரண்டு நானோ சிம் ஸ்லாட்கள் கொண்ட இந்த ஸ்மார்ட்ஃபோன், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. 6.3 இன்ச் முழு ஹெச்.டி தொடு திரையும் இதில் உள்ளது. ஆக்டா கோர் ஹுவாய் ஹை சிலிக்கான 907 பிராஸசரும் 6 ஜி.பி ரேமும் வேகம் சேர்க்கின்றன. பின் பகுதியில் இருக்கும் டூயல் கேமராவில், 16 மெகா பிக்ஸல் சென்சார் உள்ளது. 24 மெகா பிக்ஸல், இரண்டாவது சென்சாரும் இருக்கிறது. இதே போல் முன்பக்கத்திலும் டூயல் கேமரா இருக்கிறது. 24 மெகா பிக்ஸல் மற்றும் 2 மெகா பிக்ஸல் சென்சார்களும் உள்ளன. 128 ஜி.பி ஸ்டோரேஜ் கொண்ட இந்த ஸ்மார்ட்ஃபோனில், 256 ஜி.பி வரை ஸ்டோரேஜை, மெமரி கார்டு மூலம் நீட்டித்துக் கொள்ளலாம்.
நோவா 3ஐ சிறப்பம்சங்கள்:
இரண்டு நானோ சிம் ஸ்லாட்கள் கொண்ட இந்த ஸ்மார்ட்ஃபோன், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. 6.3 இன்ச் முழு ஹெச்.டி தொடு திரையும் இதில் உள்ளது. ஆக்டா கோர் ஹுவாய் ஹை சிலிக்கான 710 பிராஸசரும் 4 ஜி.பி ரேமும் வேகம் சேர்க்கின்றன. பின் பகுதியில் இருக்கும் டூயல் கேமராவில், 16 மெகா பிக்ஸல் சென்சார் உள்ளது. 2 மெகா பிக்ஸல், இரண்டாவது சென்சாரும் இருக்கிறது. இதே போல் முன்பக்கத்திலும் டூயல் கேமரா இருக்கிறது. 24 மெகா பிக்ஸல் மற்றும் 2 மெகா பிக்ஸல் சென்சார்களும் உள்ளன. 128 ஜி.பி ஸ்டோரேஜ் கொண்ட இந்த ஸ்மார்ட்ஃபோனில், 256 ஜி.பி வரை ஸ்டோரேஜை, மெமரி கார்டு மூலம் நீட்டித்துக் கொள்ளலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்