புதிய Kirin SoC-ஐ உறுதிப்படுத்துவதைத் தவிர, Mate XS-ன் எந்த முக்கிய அம்சங்களையும் விவரக்குறிப்புகளையும் Huawei குறிப்பிடவில்லை.
பிப்ரவரியில் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய தொலைபேசியாக Huawei Mate X வெளியிடப்பட்டது
5G தாரவுடன் Huawei Mate XS, மார்ச் 2020-ல் அறிமுகமாகும் என்று சீன நிறுவனம் அறிவித்தது. புதிய ஸ்மார்ட்போன், அசல் Mate X போன்றே foldable design-ஐ கொண்டிருக்கும். இருப்பினும், Mate X-ல் இடம்பெற்றுள்ள Kirin 980 SoC-க்கு பதிலாக Huawei-யின் HiSilicon Kirin 990 SoC-யால் இயக்கப்படும்.
சீனாவில் Mate X வெளியீடில், Mate XS அறிமுகத்தை சிறப்பிக்கும் ஒரு ஸ்லைடை Huawei காட்டியது. Huawei Mate XS போல் அல்லாமல், அசல் Mate X, 5G இணைப்பை ஆதரிக்க Balong 5000 modem உடன் HiSilicon Kirin 980 SoC-ஐ உள்ளடக்கியது.
கடந்த மாதம், Huawei, Kirin 990 SoC உடன் Mate 30 மற்றும் Mate 30 Pro-வை வெளியிட்டது. "மிக சக்திவாய்ந்த" 5G modem"உலகின் மிக சக்திவாய்ந்த 5G system" சேர்க்கப்பட வேண்டும் என்று கூறப்படும் சிப்செட், Mate 30 சீரிஸை அறிமுகப்படுத்துவதற்கு சில நாட்களுக்கு முன்பு நிறுவனத்தின் 5G திறன் கொண்டதை சலுகையாக அறிவிக்கப்பட்டது.
![]()
புதிய Kirin SoC-ஐ உறுதிப்படுத்துவதைத் தவிர, Mate XS-ன் எந்த முக்கிய அம்சங்களையும் விவரக்குறிப்புகளையும் Huawei குறிப்பிடவில்லை. இருப்பினும், புதன்கிழமை நிகழ்வில் அதிகாரப்பூர்வ ஸ்லைடில் காண்பிக்கப்பட்ட ரெண்டர், தொலைபேசியில் Mate X போன்ற வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கிறது. கைபேசியில், லைக்கா ஒளியியல் இருப்பதாகவும் தெரிகிறது.
ஆகஸ்டில், Mate X சில படங்களுடன் TENAA-வில் தோன்றியது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் MWC 2019-ல் காட்சிப்படுத்தியதில் நுட்பமான மாற்றங்களைக் குறிக்கிறது. மாடல் எண் Huawei TAH-AN00 கொண்ட தொலைபேசி மாற்றியமைக்கப்பட்ட பொத்தான் இடங்களைக் கொண்டிருப்பதாகத் தோன்றியது. மேலும், மேம்பட்ட கீலுடன் வரக்கூடும்.
ஆரம்பத்தில் Huawei சீனாவில் Mate X-ஐ அறிமுகப்படுத்தியது. ஆயினும்கூட, இந்தியா உள்ளிட்ட பிற சந்தைகளுக்கு கொண்டு வருவதற்கான திட்டங்கள் உள்ளன. foldable phone இந்த மாத தொடக்கத்தில், இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட Samsung Galaxy Fold-க்கு
எதிராக போட்டியிடுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Kepler and TESS Discoveries Help Astronomers Confirm Over 6,000 Exoplanets Orbiting Other Stars
Rocket Lab Clears Final Tests for New 'Hungry Hippo' Fairing on Neutron Rocket