அடேங்கப்பா...! Huawei செய்யும் சாதனை பற்றி கேள்விபட்டீர்களா...?

Huawei Mate X சீனாவில் 2019 நவம்பர் நடுப்பகுதியில் விற்பனைக்கு வந்தது.

அடேங்கப்பா...! Huawei செய்யும் சாதனை பற்றி கேள்விபட்டீர்களா...?

இந்த ஆண்டின் பிற்பகுதியில் Mate X சீரிஸை தொடங்க ஹவாய் முனைப்புடன் இருக்கிறது

ஹைலைட்ஸ்
  • இதுவரை, 2,00,000 யூனிட்டுகளுக்கு மேல் Mate X-ஐ அனுப்பியதாக கூறப்படுகிறத
  • சீனாவில், Mate X, CNY 16,999-க்கு விற்கப்படுகிறது
  • ஹவாய், கடந்த ஆண்டு Mate X விற்பனையை தாமதப்படுத்த வேண்டியிருந்தது
விளம்பரம்

சீன தொலைத் தொடர்பு மற்றும் கைபேசி நிறுவனமான ஹவாய் தனது மடிக்கக்கூடிய Mate X ஸ்மார்ட்போனின் 1,00,000 யூனிட்டுகளை ஒவ்வொரு மாதமும் சீனாவில் விற்பனை செய்து வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

செப்டம்பர் மாதத்தில் தென் கொரியாவில் கிடைத்த Samsung Galaxy Fold-ஐப் போலல்லாமல், Mate X, 2019 நவம்பரின் மத்தியில் சீனாவில் விற்பனைக்கு வந்தது.

Huawei Mate X இப்போது சீனாவில் இரண்டு மாதங்களாக விற்பனைக்கு வந்துள்ளது. அதாவது ஹவாய் இதுவரை 2,00,000 யூனிட் மடிக்கக்கூடிய போனை விற்பனை செய்துள்ளது. இது ஒன்றும் மோசமானதல்ல, இது ஒரு சந்தையில் மட்டுமே விற்கப்படுகிறது என்பதைக் கருத்தில் கொண்டு, Android Central வெள்ளிக்கிழமையன்று ஒரு சீன வெளியீட்டை மேற்கோளிட்டுள்ளது.

சீனாவில் மட்டுமே விற்பனைக்கு வரும் Mate X, CNY 16,999 (இந்திய மதிப்பில் ரூ. 1,70,000) அல்லது சுமார் $2,400-க்கு விற்கப்படுகிறது. இது Samsung's Galaxy Fold-ஐ விட விலை அதிகம்.

foldable போனை 2019-ஆம் ஆண்டில் முதன்முதலில் சந்தைக்குக் கொண்டுவருவதற்கான போட்டியில் ஹவாய் மற்றும் அதன் தென் கொரிய போட்டியாளரான சாம்சங், இரண்டும் முன்னணியில் இருந்தன.

முதலில் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் (Mobile World Congress - MWC) 2019-ல் வெளியிடப்பட்டது, Huawei Mate X அந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்க திட்டமிடப்பட்டது.

போட்டியாளரான சாம்சங் தனது Galaxy Fold-ஐத் தொடர்ந்து திரை மற்றும் பிற சிக்கல்களைத் தாமதப்படுத்தியதை அடுத்து, நிறுவனம் அதன் foldable screen-ஐ செம்மைப்படுத்தவும், மேம்படுத்தவும் நவம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தியது.

Huawei Mate X Foldable Phone's Successor Launching in H2 2020: Report

Huawei Mate X Improved Version With Kirin 990 SoC Set to Launch at MWC 2020: Report

Huawei Mate XS Foldable Phone With Kirin 990 SoC Set to Debut in March 2020

Huawei Mate X Foldable Phone Finally Goes on Sale Next Month

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

#சமீபத்திய செய்திகள்
  1. Samsung Galaxy S26: Camera Upgrades மற்றும் Snapdragon 8 Elite Gen 5 உடன் முழு விவரங்கள் லீக்
  2. வெறும் ₹1,299-க்கா ANC நெக்பேண்டா? Lava-வோட இந்த புதிய ஆடியோ ப்ராடக்ட் எப்படி இருக்குன்னு பாருங்க!
  3. மொபைல் கெய்மிங்க்கு இதான் Next Level! OnePlus 15 பத்தி தெரிஞ்சுக்கணுமா? மிஸ் பண்ணாதீங்க
  4. இந்திய கம்பெனில இருந்து மிரட்டலான போன்! Lava Agni 4 டீஸர் பத்தி முழு விவரம்!
  5. ரியல்மி-யின் புதிய ராக்கெட்! Realme GT 8 Pro நவம்பர்-ல் Flipkart-ல் தரையிறங்குகிறது!
  6. 7,500mAh சார்ஜரே இல்லாத பேட்டரியா? புதிய iQOO Neo 11 மாடல் சும்மா தெறிக்குது!
  7. 200MP Zeiss கேமராவுடன் Vivo X300 Pro அறிமுகம்! கேமரா பிரியர்களுக்கு ஒரு பொக்கிஷம்
  8. iQOO-வின் அடுத்த ராக்கெட்! iQOO 15, 10,000+ Multi-Core ஸ்கோருடன் Geekbench-ல் மிரட்டல்
  9. ஒன்ப்ளஸ், iQOO-வுக்கு போட்டியாக Realme! GT 8 Pro நவம்பர் 20-ல் இந்தியாவில் அறிமுகம்?
  10. Snapdragon 8 Elite Gen 5 சில்லுடனான முதல் போன்! OnePlus 15 Flagship-ன் ஸ்பெஷல் அம்சங்கள் இதோ
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »