ஹூவாய் என்ஜாய் மேக்ஸ் (மேலே கொடுக்கப்பட்டுள்ளது), ஹூவாய் என்ஜாய் 9 பிளஸ் இந்த மாத இறுதியில் விற்பனைக்கு வரும்.
இன்று லண்டனில் ஹூவாய் நிறுவனத்தின் மேட் சிரீஸ் 20 அறிமுகப்படுத்தப்படுகிறது. ஹூவாய் நிறுவனத்தின் என்ஜாய் 9 பிளஸ் மற்றும் என்ஜாய் மேக்ஸ் ஸ்மார்ட்போன்கள் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு போன்களும் அதிக ஆற்றல் கொண்ட பேட்டரிகள் மற்றும் பல்வேறு சேமிப்பு வசதியைக் கொண்டுள்ளது.
என்ஜாய் 9 பிளஸ் மற்றும் என்ஜாய் மேக்ஸ் இந்த இரு போன்களும் இரட்டை கேமிரா வசதி, கைரேகை ஸ்கேனர் மற்றும் ஸ்நாப் டிராகன் புராசஸரைக் கொண்டுள்ளன. என்ஜாய் 9 பிளஸின் பின்புறம் 3டி பிம்பத்தைக் கொண்டது. என்ஜாய் மேக்ஸின் பின்புறம் லெதர் போன்று இருக்கும்.
ஹூவாய் என்ஜாய் 9 பிளஸ் மற்றும் என்ஜாய் மேக்ஸின் விலை
ஹூவாய் என்ஜாய் மேக்ஸின் விலை 18,100 ஆக இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. ஆனால் உறுதி செய்யப்படவில்லை. இதில் 4ஜிபி ராம் + 64ஜிபி சேமிப்பு திறன் கொண்டது. 4ஜிபி ராம் + 128ஜிபி சேமிப்பு திறன் கொண்ட போன் 21,300 இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன் கருப்பு, வெள்ளை, மற்றும் பிரவுன் நிறத்தில் கிடைக்கிறது. இந்த இரண்டு போன்களும் அக்டோபர் மாத இறுதியில் சீனாவில் விற்பனைக்கு வரும்.
மேலும், ஹூவாய் என்ஜாய் 9 பிளஸின் 4ஜிபி ராம்+64ஜிபி சேமிப்பு திறன் கொண்ட போன் 15,900ஆக இருக்கலாம். மேலும், 4ஜிபி ராம் + 128ஜிபி சேமிப்பு திறன் கொண்ட போன் 18,100 ஆக இருக்கலாம் என்று எதிபார்க்கப்படுகிறது. இந்த போன் மேஜிக் நைட் பிளாக், சபியர் புளூ மற்றும் அரோரா வயிலட் நிறங்களில் கிடைக்கும்.
ஹூவாய் என்ஜாய் 9 பிளஸ் சிறப்பம்சங்கள்
ஹூவாய் என்ஜாய் 9 பிளஸ் ஸ்மார்ட்போனானது, 6.5-இன்ச் (1080x2340பிக்ஸல்ஸ்) புல் ஹச்டி+ 2.5 கர்வுடு கிளாஸ் டிஸ்பிளே கொண்டுள்ளது. ஆக்டோ கிரின் 710 ஆக்டோ கோர் மற்றும் 4 ஜிபி ரேம் கொண்டுள்ளது. இதன் நினைவகத்தை 400 ஜிபி வரை விரிவாக்கம் செய்து கொள்ளலாம்.
என்ஜாய் 9பிளஸ் மொபைலை பொருத்தவரையில், f/1.8 அப்பர்சர் 13 மெகா பிக்ஸல்ஸ் பின் பக்க கேமரா மற்றும் 2 மெகா பிக்ஸல்ஸ் சென்சார் கொண்டுள்ளது. 16எம்.பி மற்றும் 2 எம்.பி செல்பி கேமராவும் கொண்டுள்ளது.
ஹூவாய் என்ஜாய் 9பிளஸ் மொபைல் 4,000 mAh பேட்டரியுடன் வருகிறது. 162.4x77.1x8.05மிமீ மற்றும் 173 கிராம் எடை கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்