சுவாரஸ்யம் என்னவென்றால் Huawei Enjoy 10-ல் fingerprint சென்சார் இல்லை.
hole-punch டிஸ்பிளே வடிவமைப்புடன் வருகிறது Huawei Enjoy 10
Huawei நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போனான Huawei Enjoy 10 அடுத்த மாதம் 1-ஆம் சந்தைக்கு வருகிறது.
Huawei Enjoy 10 விலை:
மூன்று memory உள்ளமைவுடனும் நான்கு நிறங்களிலும் Huawei Enjoy 10 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அவை, Acacia Red, Aurora Blue, Breathing Crystal மற்றும் Magic Night Black ஆகிய நிறங்களில் வருகிறது. 4GB + 64GB ஸ்டோரேஜின் விலை CNY 1,199 (சுமார் ரூ. 12,000)-யாக விலைக் குறியீட்டைக் கொண்டுள்ளது. 4GB + 128GB மற்றும் 6GB + 64GB ஸ்டோரேஜ் கொண்ட இரண்டும் CNY 1,399 (சுமார் ரூ. 14,000)-யாகும். Huawei Enjoy 10 இப்போது சீனாவில் முன்கூட்டிய ஆர்டர்களுக்கு தயாராக உள்ளது, மேலும், நவம்பர் 1 ஆம் தேதி விற்பனை தொடங்கும். ஆனால், பெரிய சந்தைகளில் கிடைப்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை.
Huawei Enjoy 10 விவரக்குறிப்புகள்:
Huawei Enjoy 10-வானது EMUI 9.1 உடன் Android 9 Pie-யால் இயங்குகிறது. hole punch உடன் 6.39-inch HD+ டிஸ்பிளே அம்சத்தைக் கொண்டுள்ளது. மேலும், 90.15 சதவிகிதம் screen-to-body ratio-வைக் கொண்டுள்ளது. இது 6GB RAM மற்றும் 128GB இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டு octa-core HiSilicon Kirin 710F processor-ஆல் இயக்கப்படுகிறது. microSD card வழியாக 512GB வரை ஸ்டோரேஜை விரிவாக்கம் செய்ய இந்த போன் அனுமதிக்கிறது.
Huawei Enjoy 10, 2-megapixel depth சென்சார் உதவியுடன் 48-megapixel முதன்மை கேமராவை பேக் செய்கிறது. செல்ஃபி மற்றும் வீடியோ காலுக்கு முன்பக்கத்தில் 8-megapixel கேமரா உள்ளது. இது fast charging உதவி இல்லாமல் 4,000mAh பேட்டரி பொருத்தப்பட்டு வருகிறது. சார்ஜிங் மற்றும் file transfer-க்கு Micro-USB port அம்சத்தைக் கொண்டுள்ளது. சுவாரஸ்யம் என்னவென்றால் இந்த போனில் fingerprint சென்சார் இல்லை.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,590
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹41,061
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999