8 ஜி.பி. ரேமில் ஹானரின் அட்டகாசமான மொபைல்! 5,000 ஆம்ப் பேட்டரி பவருடன்...

8 ஜி.பி. ரேமில் ஹானரின் அட்டகாசமான மொபைல்! 5,000 ஆம்ப் பேட்டரி பவருடன்...

பெரிய டிஸ்ப்ளே இதன் சிறப்பம்சமாக இருக்கிறது. 7.09 இன்ச் முழு எச்.டி. டிஸ்ப்ளேவை கொண்டதாக  மொபைல் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

ஹைலைட்ஸ்
 • Honor X10 Max is said to feature a massive 7.09-inch display
 • The phone is rumoured to pack a dual rear camera setup
 • Honor X10 Max is said to support 22.5W fast charging

ஹானர் மொபைல்ஸ்  நிறுவனம் 8 ஜிபி ரேம் மெமரியுடன் அட்டகாசமான  மொபைலை வெளியிட்டுள்ளது. ஹானர் எக்ஸ் 10  சீரிஸ் என பெயரிடப்பட்டுள்ள இந் த மொபைலின் சிறப்பு அம்சங்களை பார்க்கலாம்.

5,000 ஆம்ப் பேட்டரி திறன் கொண்ட இந்த மொபைல் 22.5 வாட்ஸ் வேகமான சார்ஜிங்கிற்கு சப்போர்ட் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

விலையைப் பொறுத்தளவில், 6 ஜி.பி. ரேமும், 64 ஜி.பி.  இன்டர்னல் மெமரியும் கொண்ட மொபைலின் விலை ரூ. 24,600 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 6 ஜி.பி. ரேமும், 128 ஜிபி இன்டர்னல் மெமரியும் கொண்டமொபைல் ரூ. 27,800க்கும், 8 ஜிபி ரேமும், 128 ஜி.பி இன்பீல்டு மெமரியும் கொண்ட மொபைல் ரூ. 29,900க்கும் விற்பனைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஹானர் எக்ஸ் 10 மேக்ஸ், லைட் சில்வர், ரேசிங் ப்ளூ, ஸ்பீட் பிளாக் ஆகிய வண்ணங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சீனாவில் ஜூலை 2-ம்தேதி இந் த மொபைல் வெளியிடப்படுகிறது. 

பெரிய டிஸ்ப்ளே இதன் சிறப்பம்சமாக இருக்கிறது. 7.09 இன்ச் முழு எச்.டி. டிஸ்ப்ளேவை கொண்டதாக  மொபைல் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

மீடியா டெக் டைமன்சிட்டி 800 5 ஜி, எஸ்.ஓ.சி. இயங்கு தளத்தை ஹானர் மொபைல் கொண்டுள்ளது. 

48 மெகா பிக்சல் பிரைமரி கேமராவுடன், 8 மெகா பிக்சல் கொண்ட செல்பி கேமரா மொபைலில் பொருத்தப்பட்டுள்ளன. 

கனெக்ட்டிவிட்டியை பொருததளவில் 3.5 எம்.எம்.  ஆடியோ ஜக், டைப் சி யு.எஸ்.பி. சார்ஜிங் போர்ட் ஆகியவை உள்ளன. 5,000  ஆம்ப் திறன் கொண்ட பேட்டரி மொபைலில் பொருத்தப்பட்டுள்ளது. 22.5 வாட்ஸ் வேகமான  சார்ஜிங்கிற்கு இந்த பேட்டரி சப்போர்ட் செய்யும். 

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
 
 

விளம்பரம்

Advertisement

#சமீபத்திய செய்திகள்
 1. வாய்ஸ் கன்ட்ரோலுடன் சூப்பரான Mi ஸ்மார்ட் பல்பு அறிமுகம்!
 2. Realme Narzo 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகின! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!!
 3. பட்ஜெட் விலையில் ரியல்மி நார்சோ 20 சீரிஸ் நாளை அறிமுகம்!
 4. சாம்சங் கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்!
 5. OnePlus 8T அக்டோபர் 14 அறிமுகம்? முழு விவரங்கள்
 6. Moto E7 Plus ஸ்மார்ட்போன் செப்.23 அறிமுகம்!
 7. Google Play இலிருந்து Paytm செயலி நீக்கம்: விதிகளை மீறியதாக கூகுள் குற்றச்சாட்டு!
 8. வந்துவிட்டது Redmi 9A ஸ்மார்ட்போன்! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!
 9. அடுத்த வாரம் Realme C17 ஸ்மார்ட்போன் அறிமுகம்! எவ்வளவு ரூபாய் இருக்கும்?
 10. அமேசான் பொருட்கள் தரம் குறைந்தவை, எளிதில் தீப்பிடிக்கின்றன.. ஆய்வில் தகவல்
© Copyright Red Pixels Ventures Limited 2021. All rights reserved.
Listen to the latest songs, only on JioSaavn.com