Kirin 990 SoC-ஐ பேக் செய்யும் Honor V30, Honor V30 Pro! எப்போ ரிலீஸ்....?

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 24 நவம்பர் 2019 11:24 IST
ஹைலைட்ஸ்
  • Honor V30 processor வெய்போவில் கிண்டல் செய்யப்பட்டுள்ளது
  • Honor V30 Pro-வில் விவரக்குறிப்புகள் AnTuTu-ல் வெளிவந்துள்ளன
  • இரண்டு Honor போன்களும் 8GB RAM பேக் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

சீனாவில் Honor V30 வெளியீடு அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமைக்கு அமைக்கப்பட்டுள்ளது

Photo Credit: Weibo

Honor V30 மற்றும் Honor V30 Pro ஆகியவை நவம்பர் 26, செவ்வாய்க்கிழமை சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. ஆனால், அவை முறையாக அறிமுகப்படுத்தப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக, ஹவாய் துணை பிராண்ட் ஹானர் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களும் HiSilicon Kirin 990 SoC உடன் வந்து 5G இணைப்பை ஆதரிக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. Honor V30 மற்றும் Honor V30 Pro-வின் முக்கிய விவரக்குறிப்புகள் ஆன்லைனில் வெளிவந்துள்ளன. இந்த நேரத்தில் ஹானர் சந்தைக்கு என்ன திட்டமிட்டுள்ளது என்பதைக் குறிக்கிறது. கூடுதலாக, Honor V30-ன் விலை கசிந்துள்ளது. பெஞ்ச்மார்க் மூலமான AnTuTu, Honor V30 Pro-வின் சில முக்கிய சிறப்பம்சங்களையும் பரிந்துரைத்துள்ளது. இது நிறுவனத்தின் உயர்மட்ட வன்பொருளாக வரக்கூடும்.

Honor V30 மற்றும் Honor V30 Pro-வில் HiSilicon Kirin990 இருப்பதை உறுதிப்படுத்த டீஸர் வீடியோவை ஹானரின் அதிகாரப்பூர்வ வெய்போ கணக்கு வெளியிட்டுள்ளது. புதிய சிப்செட் புதிய அனுபவங்களை வழங்க 5G ஆதரவுடன் வருகிறது.

நிறுவனம் வெளியிட்ட டீஸரைத் தவிர, சீனாவிலிருந்து ஒரு டிப்ஸ்டர் Honor V3-ன் ஆரம்ப விலைக் குறியைக் குறிக்கும் படத்தை கசியவிட்டது. ஸ்மார்ட்போன் CNY 4,999 (சுமார் ரூ. 51,000)-க்கு விற்பனைக்கு வரும் என்று படம் காட்டுகிறது.

சீனாவில் Honor V30-யின் விலை அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாகவே கண்டறியப்பட்டுள்ளது

Photo Credit: Weibo

மேலும், இந்த ஸ்மார்ட்போனில் மேட்ரிக்ஸ் கேமரா அம்சமும், பல்வேறு செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான மாற்றங்களும் இருப்பதாக கூறப்படுகிறது.


Honor V30, Honor V30 Pro-வின் விவரக்குறிப்புகள் (வதந்தயானவை):

Advertisement

அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாக, Honor V30 மற்றும் Honor V30 Pro-வின் விவரக்குறிப்புகள் வெய்போவில் கசிந்துள்ளன. Honor V30-சீரிஸ் போன்களில் 6.57-inch IPS டிஸ்ப்ளே மற்றும் 91.46 percent screen-to-body ratio, 40-megapixel Sony IMX600 முதன்மை சென்சார் மற்றும் telephoto lens உடன் 8-megapixel இரண்டாம் நிலை சென்சார் ஆகியவை உள்ளன. தனித்துவமான பகுதியில், Honor V30-யில் wide-angle lens உடன் 8-megapixel மூன்றாம் நிலை சென்சார் கொண்டிருக்கும். அதே நேரத்தில் Honor V30 Pro-வில் 12-megapixel சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆகியவற்றை உள்ளடக்கியதாக வதந்தி பரப்பப்படுகிறது. ஸ்மார்ட்போன்களில் 4 மெகாபிக்சல் கேமராவும் இருக்கும்.

இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களிலும் இரண்டு சேமிப்பு வகைகளையும் ஹானர் வழங்கும் என்று கூறப்படுகிறது. Honor V30-ல் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் இரண்டு விருப்பங்களாக இருக்கும். அதே போன்று, Honor V30 Pro-வில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளமைவு விருப்பங்கள் இருக்கும். இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் திரவ குளிரூட்டல், 40W வேகமான சார்ஜிங் ஆதரவு மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், Honor V30 Pro, 27W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 7.5W ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும். Honor V30-ல் 4,200mAh பேட்டரி இருக்கும் என்றும், Honor V30 Pro-வில் 4,100mAh பேட்டரி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Advertisement

வண்ண விருப்பங்களைப் பொறுத்தவரை, Honor V30 மாடல்கள் Icelandic Fantasy, Magic Night Star River, Charm Star Blue மற்றும் Twilight Orange வண்ணங்களில் வரக்கூடும்.

மாதிரி எண் OXF-AN10-ஐக் கொண்ட ஹானர் போனையும் AnTuTu தளம் விவரித்துள்ளது. இது Honor V30 Pro என்று நம்பப்படுகிறது. பெஞ்ச்மார்க் தளத்தில் உள்ள பட்டியல், அண்ட்ராய்டு 10 பெட்டிக்கு வெளியே இயங்குகிறது. மேலும், full-HD+ (1080x2400 pixels) resolution மற்றும் 20:9 aspect ratio-வுடன் display panel-ஐ உள்ளடக்கியது என்று அறிவுறுத்துகிறது.

Photo Credit: AnTuTu

Advertisement


40-megapixel primary shooter மற்றும் 32-megapixel செல்பி கேமராவைக் குறிப்பிடுவதன் மூலம் சீன டிப்ஸ்டரால் அறிவிக்கப்பட்டதை AnTuTu பட்டியல் உறுதிப்படுத்துகிறது. மேலும், AnTuTu-ல் பெஞ்ச்மார்க் செய்யப்பட்ட போனில் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜ் உள்ளது.

இந்த வார தொடக்கத்தில், அதே OXF-AN10 மாடல் எண்ணைக் கொண்ட ஹானர் தொலைபேசி கீக்பெஞ்சில் காணப்பட்டது. அந்த வெளிப்பாடு புதிய மாடலில் ஆண்ட்ராய்டு 10 ஆதரவை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

வரவிருக்கும் செவ்வாயன்று பெய்ஜிங்கில் நடைபெறும் ஒரு நிகழ்வில் Honor V30-ஐ அறிமுகப்படுத்துவதால், வரவிருக்கும் நாட்களில் வலைதளத்தில் சில புதிய வதந்திகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கலாம்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. பவர் பேங்க் இனிமேல் தேவையில்ல! 7,000mAh Battery கூட Oppo புதுசா இறக்குன A6 5G Mobile!
  2. தரமான Budget Phone தேடுறீங்களா? Samsung Galaxy M07-ன் விலையும் Specifications-உம் தெரிஞ்சுக்கோங்க!
  3. Alexa பேசுனா லைட் எரியணுமா? இந்த Amazon சேல்ல Smart Bulbs-க்கு இருக்கிற அதிரடி Deals-ஐ மிஸ் பண்ணாதீங்க!
  4. எப்பவும் போல டைப் பண்ண போரடிக்குதா? Clicky Sound-உடன் Premium Feel கொடுக்கும் Mechanical Keyboards ஆஃபர்!
  5. கரண்ட் பில் கம்மியாகணும்னா இதை வாங்குங்க! 5-Star Rated Washing Machines-க்கு Amazon கொடுக்கும் Mega Discount!
  6. Game of Thrones ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ்! Realme 15 Pro 5G-யின் ஸ்பெஷல் எடிஷன் ஃபோன்
  7. Game of Thrones ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ்! Realme 15 Pro 5G-யின் ஸ்பெஷல் எடிஷன் ஃபோன்
  8. Amazon-ன் Great Indian Festival விற்பனையில் JBL, Boat மற்றும் Zebronics Party Speakers-களுக்கு 72% வரை தள்ளுபடி
  9. பட்ஜெட் கவலை இனி இல்லை! Amazon-ன் Great Indian Festival Sale-ல் HP, Lenovo, Dell, Asus Laptops-களுக்கு 40% வரை தள்ளுபடி!
  10. Xiaomi-யின் புதிய ஃபிளாக்ஷிப் போன் Xiaomi 15T Pro உடன் MediaTek Dimensity 9400+ சிப்செட் அறிமுகம்!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.