லீக்கானது Honor V30, V30 Pro-வின் விவரங்கள்!

Honor V30 Pro, Kirin 990 5G SoC-யால் இயக்கப்படும். தொலைபேசிகள் எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்பது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.

லீக்கானது Honor V30, V30 Pro-வின் விவரங்கள்!

Photo Credit: Twitter / @RODENT950

Honor V30 சீரிஸ் தொலைபேசிகள் in-house Kirin 990 5G chipset மூலம் இயக்கப்படும்

ஹைலைட்ஸ்
  • Triple rear cameras அம்சத்துடன் வருகிறது Honor V30
  • Honor V30 Pro, Quad rear camera அமைப்பைக் கொண்டுள்ளது
  • OLED display-வுடன் வருகிறது Honor V30
விளம்பரம்

Honor சமீபத்தில் அதன் வரவிருக்கும் Honor V30 சீரிஸ் தொலைபேசிகள் in-house Kirin 990 5G chipset மூலம் இயக்கப்படும் என்று வெளிப்படுத்தியது. ஒரு புதிய கசிவு ஹவாய் ஹானர் துணை நிறுவனம் விரைவில், இரண்டு Honor V30 சீரிஸ் தொலைபேசிகளை அறிமுகப்படுத்தக்கூடும் என்று கூறுகிறது - Honor V30 மற்றும் Honor V30 Pro. கூடுதலாக, Honor V30 மற்றும் Honor V30 Pro போன்ற சில முக்கிய விவரக்குறிப்புகள் ஆன்லைனில் வெளிவந்துள்ளன. இருப்பினும், இரண்டு Honor V30 சீரிஸ் தொலைபேசிகள் எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்பது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.

Tipster Teme (@RODENT950)-ன் ட்வீட்டின் படி, Honor இரண்டு முதன்மை தொலைபேசிகளை அறிமுகப்படுத்த தயாராக உள்ளது - Honor V30 மற்றும் Honor V30 Pro. Tipster, Honor V30-ஐ சித்தரிக்கும் ஒரு படத்தையும் பகிர்ந்து கொண்டார். இது மெல்லிய பெசல்களுடன் full-screen display மற்றும் மேல் இடது மூலையில் அமைந்துள்ள hole-punch front camera ஆகியவற்றைக் கொண்டுள்ளது. Honor V30-ன் முன் புறத்தின் வடிவமைப்பு Honor 20-ஐ ஒத்திருக்கிறது. Honor V30, Kirin 990 SoC-ல் இயக்கப்படும் என்று ட்வீட்டில் குறிப்பிடுகிறது. ஆனால் இது Huawei's in-house flagship chipset-ல் 4 ஜி-மட்டுமே மாறுபாடாக தோன்றுகிறது.

Honor V30, Honor V30 Pro கேமரா விவரக்குறிப்புகள் (எதிர்பார்க்கப்படும்)

மறுபுறம், Honor V30 Pro, Kirin 990 5G SoC-யால் இயக்கப்படும் என்று கடந்த மாதம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டது. Honor V30-யின் லீக்கான விவரக்குறிப்புகளைப் பொறுத்தவரை, LCD display உடன் single punch-hole front camera-வைக் கொண்டிருக்கும். இந்த தொலைபேசி 60-megapixel rear camera-வை triple rear camera அமைப்பின் ஒரு பகுதியாகக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், 22.5W SuperCharge ஆதரவுடன் 4,000mAh பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும்.

மிகவும் சக்திவாய்ந்த Honor V30 Pro-வைப் பொறுத்தவரை, இது 60-megapixel main sensor அடங்கிய quad rear camera அமைப்பைக் கொண்டுள்ளது. வரவிருக்கும் Honor flagship, AMOLED display உடன் dual punch-hole selfie cameras அம்சத்தோடு இடம்பெறும். இது வேகமான 40W SuperCharge ஆதரவுடன் பெரிய 4,200mAh பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், Honor V30 Pro 15W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவை வழங்குவதாகவும் கூறப்படுகிறது.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. Oppo K13 Turbo: போனுக்குள்ள ஃபேனா? இந்தியால லான்ச் ஆன முதல் கூலிங் ஃபேனுடன் கூடிய ஸ்மார்ட்போன்
  2. Lava Blaze AMOLED 2 5G: ₹13,499-க்கு AMOLED டிஸ்ப்ளே, Dimensity 7060 ப்ராசஸரோட மிரட்டல் லான்ச்
  3. Tecno Spark Go 5G: ₹10,000-க்குள்ள இந்தியாவுலயே ஸ்லிம்மான 5G போன்! ஆகஸ்ட் 14-ல் வெளியீடு!
  4. Panasonic-ன் புது மிரட்டல் டிவி! MiniLED தொழில்நுட்பம், Dolby Atmos-உடன் வெளியீடு!
  5. Samsung Galaxy A17 5G: ₹17,500-க்கு ஒரு பெரிய பேட்டரி போன்! பட்ஜெட் மார்க்கெட்டில் ஒரு புதிய அஸ்திரம்!
  6. Lava-வின் புதிய அஸ்திரம்! Blaze AMOLED 2 5G லான்ச் தேதி உறுதி! AMOLED டிஸ்ப்ளே உடன் அதிரடி!
  7. Motorola Razr 60: போன்ல வைரங்கள் பதிக்கப்பட்டு வந்தாச்சு! அசத்தலான Brilliant Collection!
  8. Oppo K13 Turbo சீரிஸ்: போனுக்குள்ளயே ஃபேன் வச்சு மாஸ் காட்ட வர்றான்! இந்தியால ஆகஸ்ட் 11-ல் லான்ச்!
  9. Vivo Y400 5G லான்ச்! Snapdragon 4 Gen 2 SoC-வோட கலக்கப் போகுது!
  10. Amazon சேல்ல லேப்டாப் வாங்க இதுதான் சரியான நேரம்! ரூ. 60,000-க்குள்ள டாப் பிராண்டுகளின் மாஸ் டீல்ஸ்!
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »