5G-ரெடி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை ஹானர் அறிமுகப்படுத்தியுள்ளது - Honor V30 மற்றும் Honor V30 Pro. Honor V30-சீரிஸ் போன்கள் இரண்டும் Kirin 990 SoC-யால் இயக்கப்படுகின்றன. மேலும் 40-மெகாபிக்சல் பிரதான சென்சார் கொண்ட மூன்று பின்புற கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. Honor V30 மற்றும் Honor V30 Pro இரண்டும் டூயல் செல்ஃபி கேமராக்களுடன் hole-punch வடிவமைப்பைக் கொண்டுள்ளன. எதிர்பார்த்தபடி, ஹானர் வி-சீரிஸில் கடந்த கால வெளியீடுகளைப் பார்க்கும்போது, Honor V30 மற்றும் Honor V30 Pro ஆகியவை Honor View 30 மற்றும் Honor View 30 Pro என சீனாவுக்கு வெளியே உள்ள சந்தைகளில் அறிமுகப்படுத்தப்படும் என்று நிறுவனம் ஒரு செய்திக்குறிப்பில் உறுதிப்படுத்தியுள்ளது.
Honor V30, Honor V30 Pro-வின் விலை:
Honor V30-யின் 6GB + 128GB வேரியண்ட் CNY 3,299 (சுமார் ரூ. 33,000)-யாக விலையிடப்படுள்ளது. அதே சமயம் 8GB + 128GB மாடல் CNY 3,699 (சுமார் ரூ. 37,000) விலைக் குறியீட்டுடன் வருகிறது. Honor V30 முன்கூட்டிய ஆர்டர்கள் இப்போது நேரலையில் உள்ளன. மேலும், அதன் முதல் விற்பனை டிசம்பர் 5-ஆம் தேதி சீனாவில் நடத்தப்படும்.
Honor V30 Pro-வின் 8GB + 128GB வேரியண்ட் CNY 3,899 (சுமார் ரூ. 39,000) விலைக் குறியீட்டைக் கொண்டுள்ளது. அதே சமயம் போனின் 8GB + 256GB வேரியண்ட் CNY 4,199 (சுமார் ரூ. 42,000)-க்கு கிடைக்கிறது. Honor V30 Pro-வின் முன்கூட்டிய ஆர்டர்கள் டிசம்பர் 5-ஆம் தேதி துவங்கும். அதன் முதல் விற்பனை டிசம்பர் 12-ஆம் தேதி சீனாவில் நடைபெறும்.
Honor V30 மற்றும் V30 Pro இரண்டும் Icelandic Fantasy, Phantom Star River, Charm Starfish Blue மற்றும் Twilight Orange ஆகிய வண்ண விருப்பங்களில் வருகின்றன. இருப்பினும், இந்தியா உள்ளிட்ட பிற சந்தைகளில் Honor V30 மற்றும் V30 Pro கிடைப்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
Honor V30, Honor V30 Pro-வின் விவரக்குறிப்புகள்:
Honor V30 மற்றும் அதன் Pro வேரியண்ட் நிறைய இண்டர்னல் விவரக்குறிப்புகளைப் பகிர்ந்து கொள்கின்றன. அவற்றின் வடிவமைப்பும் மிகவும் இணையானதாக இருக்கிறது. இரண்டு போன்களும் ஒரே மாதிரியான வண்ண விருப்பங்களில் glossy finish உடன் வருகின்றன. இதேபோன்ற கேமரா தொகுதி வடிவமைப்பைக் கொண்டுள்ளன மற்றும் அங்கீகாரத்திற்காக side-mounted fingerprint சென்சார் உள்ளது. டூயல்-சிம் (நானோ) Honor V30 மற்றும் Honor V30 Pro, Magic UI 3.0.1 உடன் Android 10-ஆல் இயங்குகிறது.
Honor V30 மற்றும் அதன் Pro தொடரானது 91.46 percent screen-to-body ratio மற்றும் 400ppi pixel density உடன் 6.57-inch full-HD+ (1080 x 2400 pixels) டிஸ்பிளே அம்சத்தைக் கொண்டுள்ளது. இரண்டு போன்களும் 8GB RAM மற்றும் 128GB இண்டர்னல் ஸ்டோரேஜுடன் Kirin 990 SoC-யால் இயக்கப்படுகிறது. இரண்டு போன்களும் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு மற்றும் hole-punch உடன் டூயல் செல்ஃபி கேமரா ஆகியவை கொண்டுள்ளன.
Honor V30, f/2.4 aperture உடன் 8-megapixel telephoto lens மற்றும் f/2.4 lens உடன் 8-megapixel wide-angle shooter உதவியோடு, f/1.8 aperture உடன் 40-megapixel பிரதான கேமராவை பேக் செய்கிறது. Honor V30 Pro-வும் f/1.8 aperture உடன் 40-megapixel பிரதான கேமரா மற்றும் f/2.4 lens உடன் 8-megapixel telephoto shooter-ஐக் கொண்டுள்ளது. ஆனால், f/2.2 aperture உடன் அதிக சக்திவாய்ந்த 12-megapixel wide-angle கேமரா உதவுகிறது. இரண்டு போன்களும் f/2.2 aperture உடன் 8-megapixel telephoto லென்ஸோடு இணைக்கப்பட்டு, f/2.0 aperture உடன் 32-megapixel முன் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.
Honor V30 மற்றும் V30 Pro, 256GB உள்ளடக்கிய ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. ஆனால், இவற்றை மேலும் விரிவாக்கமுடியது. இரண்டு போன்களின் இணைப்பு விருப்பங்களில் 5G, 4G LTE, Wi-Fi a/b/g/n/ac, Bluetooth 5.1, GLONASS, BeiDou, GPS/A-GPS மற்றும் NFC ஆகியவை அடங்கும். புதிய Honor V30 சீரிஸ் போன்களில் உள்ள சென்சார்களில் accelerometer, ambient light sensor, compass, gyroscope, proximity சென்சார் மற்றும் அங்கிகாரத்திற்காக side-mounted fingerprint சென்சார் ஆகியவை அடங்கும்.
Honor V30, 4,200mAh பேட்டரியை பேக் செய்கிறது. அதே சமயம் Honor V30 Pro-வில் சிறிய 4,100mAh பேட்டரி பொருத்தப்படுள்ளது. இரண்டு போன்களும் 40W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. ஆனால், Honor V30 Pro, 27W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவையும் வழங்குகிறது. Honor V30 Pro-வின் பரிமாணங்களில் 162.7x75.8x8.8mm அளவீட்டையும், 206 கிராம் எடையையும் கொண்டதாகும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்