இந்த ஸ்மார்ட்போன், 599 யுவான்கள் (6,000 ரூபாய்) என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஹானர் ப்ளே 8 தற்போது சீனாவில் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளது
ஹவாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹானர், 'ஹானர் ப்ளே 8' என புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன், ஹானர் ப்ளே 8A மற்றும் ஹானர் ப்ளே 8C ஆகிய ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் இணைந்துள்ளது. ஹானர் ப்ளே 8 தொடரின் மற்ற ஸ்மார்ட்போன்கள் போலவே, இந்த ஸ்மார்ட்போனும் ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போன் போலவே அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஹீலியோ A22 எஸ் ஓ சி ப்ராசஸர், 3020mAh பேட்டரி, 13 மெகாபிக்சல் கேமரா என பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.
'ஹானர் ப்ளே 8': விலை!
2GB RAM மற்றும் 32GB என ஒரே வகையில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், 599 யுவான்கள் (6,000 ரூபாய்) என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் நீலம் (Aurora Blue) மற்றும் கருப்பு (Midnight Black) என இரண்டு வண்ணங்களில் அறிமுகமாகியுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் தற்போது சீனாவில் விற்பனையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போன், சர்வதேச சந்தையில் எப்போது அறிமுகமாகும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
'ஹானர் ப்ளே 8': சிறப்பம்சங்கள்!
இரண்டு சிம் கொண்ட ஸ்மார்ட்போன், ஆண்ட்ராய்ட் பை அமைப்பை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5.71- இன்ச் அளவிலான HD+ (720x1520 பிக்சல்கள்) திரையை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஹீலியோ A22 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.
ஒரே ஒரு பின்புற கேமராவை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். அந்த கேமரா 13 மெகாபிக்சல் என்ற அளவை கொண்டுள்ளது. மேலும், முன்புறத்தில் 5 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமராவையும் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 3,020mAh அளவிலான பேட்டரியையும் கொண்டுள்ளது. மேலும் 4G, வை-பை மற்றும் ப்ளூடூத் வசதிகளை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
Vivo V70 Series India Launch Timeline Leaked; Two Models Expected to Debut