Honor-ன் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் - ஹானர் பிளே 4 டி புரோ மற்றும் ஹானர் பிளே 4 டி. ஹானர் ப்ளே 4 டி புரோ வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்சுடன் வருகிறது. ஹானர் ப்ளே 4 டி ஹோல்-பஞ்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.
Honor Play 4T Pro-வின் அடிப்படை 6 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை சிஎன்ஒய் 1,499 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.16,200)-யாகவும், அதன் 8 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை சிஎன்ஒய் 1,699 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.18,400)-யாகவும் உள்ளது. இந்த போன் ப்ளூ, எமரால்டு மற்றும் பிளாக் கலர் ஆப்ஷன்களில் வருகிறது. இந்த போன் VMall மூலம் இன்று முதல் கிடைக்கிறது.
Honor Play 4T-யின் ஒரே 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை சிஎன்ஒய் 1,199 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.12,900) ஆகும். இந்த ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் எமரால்டு வண்ண ஆப்ஷன்களில் வருகிறது. போனின் விற்பனை ஏப்ரல் 21 அன்று நடைபெறுகிறது.
ஹானர் ப்ளே 4 டி புரோ டூயல்-சிம் (நானோ) ஸ்லாட்டைக் கொண்டுள்ளது. இந்த போன் மேஜிக் யுஐ 2.1 உடன் Android 9 Pie-ல் இயங்குகிறது. இது 6.3 இன்ச் ஃபுல்-எச்டி + (1,080x2,400 பிக்சல்கள்) ஓஎல்இடி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த போன், ARM Mali-G52 MP6 GPU மற்றும் 8 ஜிபி ரேம் உடன் ஆக்டா கோர் HiSilicon Kirin 810 SoC-யைக் கொண்டுள்ளது.
இந்த போனில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது, இதில் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவை அடங்கும். செல்ஃபிக்களுக்கு, முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் கேமரா சென்சார் உள்ளது.
இந்த போன், 128 ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. இதனை, மைக்ரோ எஸ்.டி கார்டு வழியாக (256 ஜிபி வரை) விரிவாக்கம் செய்யலாம். போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளது. ஹானர் ப்ளே 4 டி ப்ரோ 22.5W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் 4,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த போன் 157.4x73.2x7.75 மிமீ அளவு மற்றும் 165 கிராம் எடையும் கொண்டது.
ஹானர் ப்ளே 4 டி டூயல்-சிம் (நானோ) ஸ்லாட்டைக் கொண்டுள்ளது. இந்த போன், மேஜிக் யுஐ 3.1 உடன் Android 10-ல் இயக்குகிறது. இது 6.39 இன்ச் எச்டி + (720x1,560 பிக்சல்கள்) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த போன் ARM Mali-G51 GPU மற்றும் 6GB RAM உடன் ஆக்டா கோர் ஹைசிலிகான் கிரின் 710A SoC-யைக் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளது. இதில் ப்ளாஷ் உடன் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் ஆகியவை அடங்கும். முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா சென்சார் உள்ளது.
இந்த போன், 128 ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. இதனை, மைக்ரோ எஸ்.டி கார்டு வழியாக (512 ஜிபி வரை) விரிவாக்கம் செய்யலாம். போனில் பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது. ஹானர் ப்ளே 4 டி 10W சார்ஜிங் ஆதரவுடன் 4,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த போன் 159.81 × 76.13 × 8.13 மிமீ அளவு மற்றும் 176 கிராம் எடை கொண்டதாகும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்