நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். மொபைல் போன்களை தாண்டியும் மற்ற கேட்ஜெட்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். இப்போ நாம் பார்க்க இருப்பது Honor Magic V3 செல்போன் பற்றி தான்.
Honor Magic V3 செல்போன் அடுத்த தலைமுறை மடிக்கக்கூடிய தொலைபேசியாக ஜூலை மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது விரைவில் உலக சந்தைகளில் அறிமுகப்படுத்தப்படலாம். தனித்துவமான வடிவமைப்பு, ஸ்னாப்டிராகன் சிப்செட், ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த ஹானர் போன் வெளிவரும். மேலும் இந்த போனின் சிறப்பு அம்சங்களை விரிவாகப் பார்க்கலாம்.
இந்த செல்போனில் உள்ள சிப்செட்டின் பிரைம் கோர் 3.30GHz உச்ச கடிகார வேகத்தைக் கொண்டுள்ளது. அதாவது கேமிங் மாஸ் காட்டும். Adreno 750 GPU கிராபிக்ஸ் கார்டு பொருத்தப்பட்டிருக்கும். Snapdragon 8 Gen 3 சிப்செட் மூலம் இயக்கப்படும் என நிறுவனம் கூறுகிறது. தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் அரசாங்க ஒழுங்குமுறை ஆணையத்தில் (TDRA) அங்கீகாரம் பெற்றுள்ளது. சமீபத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மேஜிக் V3 செல்போன் FCP-AN10 என்ற மாடல் எண்ணைக் கொண்டுள்ளது.
Honor Magic V3 சீனாவில் 7.92-இன்ச் பிரைமரி LTPO OLED டிஸ்பிளே மற்றும் 6.43-inch LTPO OLED கவர் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இரண்டு டிஸ்ப்ளேக்களும் ஸ்டைலஸ் சப்போர்ட் கொடுக்கிறது. 16 ஜிபி வரை ரேம் மற்றும் 512 ஜிபி வரை மெமரி வசதி உள்ளது. ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான MagicOS 8.0.1 மூலம் இயங்குகிறது 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 40 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா ஆகியவற்றை உள்ளடக்கிய மூன்று வெளிப்புற கேமரா பொருத்தப்பட்டுள்ளது. செல்ஃபி எடுக்க 40 மெகாபிக்சல் கேமராவையும் கொண்டுள்ளது. 66W வயர்டு சார்ஜிங் சப்போர்ட் உள்ளது. 5,150mAh சிலிக்கான் கார்பன் பேட்டரி உள்ளது. இது தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான IPX8 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது.
Wi-Fi 7, ப்ளூடூத் 5.3, NFC, டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர் அமைப்புகளுடன் வருகிறது. பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் உள்ளிட்ட மூன்று கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. முன்பக்க ஷூட்டர் மற்றும் 3டி ஃபேஸ் அன்லாக் செய்ய உதவும் 3D டெப்த் ஷூட்டர் உள்ளது. 4 வருட OS அப்டேட்கள் மற்றும் 5 வருட செக்யூரிட்டி கனேக்டிவிட்டிகளை உறுதியளித்துள்ளது.
ஹானர் நிறுவனம் தொடர்ந்து அதிநவீன சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனத்தின் ஸ்மார்ட்போன், டேப்லெட் உள்ளிட்ட சாதனங்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இப்போது Honor Magic V3 இந்தியாவில் அறிமுகமானல் பல முன்னணி பிராண்ட் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த புதிய போன்கள் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்