ஹூவாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹானர், ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தில் தனது புதிய கண்டுபிடிப்பான 'ஹானர் மேஜிக் 2' போனை சீனாவில் வரும் அக்.31ஆம் தேதி வெளியிட உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்து கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த அந்த நிறுவனத்தின் ஐஎஃப்ஏ 2018 நிகழ்ச்சியில் சிறு முன்னோட்டம் காட்டப்பட்டது. எனினும் இந்த போன் குறித்து அனைத்து தகவல்களும் அப்போது வெளியிடப்படவில்லை. தற்போது இதன் புதிய முன்னோட்ட வீடியோக்கள் சீன சமூகவளைதளமான வேய்போவில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், போனின் அருகிலான தோற்றம், அதன் வடிவமைப்பு, கலர் வகைகள் உள்ளிட்டவை காட்டப்படுகிறது. சீனர்கள் சிலர் இந்த போனை கையில் வைத்தவாறு டிக் டோக்கில் வீடியோ வெளியிட்டுள்ளனர்.
ஹானர் நிறுவனம் திங்களன்று வேய்போவில் 'ஹானர் மேஜிக் 2' மற்றும் பெட்டிகளுடன் சில தகவல்களுடன் புகைப்படங்களையும் வெளியிட்டது. அதில் முதல் படத்தின் மூலம் 'ஹானர் மேஜிக் 2' ஸ்மார்ட்போன் 3 கேமரா சென்சார் மற்றும் எல்இடி ஃபிளாஷ் இருப்பது தெரியவந்துள்ளது. அடுத்த படத்தில், முன்பக்க நாட்ச் டிஸ்பிளேயில் கேமரா இருப்பது போல் தெரியவில்லை. மற்றொரு படத்தில், புதிய கிரேடியன்ட் நிறங்களை பின்பக்கம் கொண்டுள்ளது. அதில் ப்ளு மற்றும் ரெட் நிறங்களை கொண்டுள்ளதாக தெரிகிறது.
கேமராவை பொறுத்தவரையில், 'ஹானர் மேஜிக் 2' ஸ்மார்ட்போனில் கைமுறையாக இயக்கும் கேமராவே என நிறுவனம் முன்னதே தெரிவித்தது போலே வேய்போவிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் செயற்கை தொழில்நுட்ப விஷனுடன் வருகிறது.
'ஹானர் மேஜிக் 2' ஸ்மார்ட்போனின் நேரடி தோற்றம் கொண்ட உறுதிசெய்யப்படாத டிக் டோக் வீடியோ ஒன்று யூ-டியூபிலும் வளம்வந்து கொண்டிருக்கிறது. 'ஹானர் மேஜிக் 2' பின்னணி இசையில் டிரம்ஸ் வாசிப்பது போன்று போகும் அதில் கைமுறை கேமரா குறித்தும் காட்டப்படுகிறது.
'ஹானர் மேஜிக் 2' ஸ்மார்ட்போனானது ஸ்போர்ட் பேசல் ப்ரி டிஸ்பிளே, ஹைசிலிகோன் கிரின் 980 கொண்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 3,400mAh கொண்ட இந்த போன் ஹூவாய் 40 வாட்ஸ் சூப்பர் சார்ஜிங் டெக்னாலஜி கொண்டுள்ளது. பின்பக்கம் 16 மெகாபிக்ஸல்ஸ் சென்சார், 24 மெகாபிக்ஸல்ஸ் சென்சார் மற்றும் இன்னொரு 16 மெகாபிக்ஸல்ஸ் சென்சார் கொண்டுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன் ஆண்ட்ராய்டு 9.0 பை கொண்டு 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டு வெளிவருவதாக தெரிகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்