ஹவாயின் துணை நிறுவனமான ஹானர் நிறுவனம், முதல் 5G ஸ்மார்ட்போனை 2019-ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த தகவலை ஹானர் நிறுவனம் உறுதி செய்துள்ளது. ஷாங்காயில் நடைபெற்ற 2019 உலக மோபைல் காங்கிரஸ் மாநாட்டில், ஹானர் நிறுவனத்தின் தலைவரான ஜார்ஜ் ஜாய் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். 5G வசதியுடன் வெளியாகவுள்ள இந்த ஸ்மார்ட்போன், சிறந்த சிறப்பம்சங்களை கொண்டு இந்த போன் வெளியாகும் என அந்த நிறுவனம் உறுதி செய்துள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை 2020-திற்குள் 100 மில்லியன் எண்ணிக்கையை தொடும் எனவும் ஜாய் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஜார்ஜ் ஜாய் இந்த 5G ஸ்மார்ட்போன் 2019-ஆம் ஆண்டின் நான்காவது கால்பகுதியில் வெளியாகும் என்பதை உறுதி செய்துள்ளார். இந்த தகவலை வெளியிட்ட ஜாய், இதன் விலை மற்றும் இந்த ஸ்மார்ட்போன் குறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை. 2019-ஆம் ஆண்டின் இறுதியில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்ற தகவலை ஜாய் ஷாங்காயில் நடைபெற்ற 2019 உலக மோபைல் காங்கிரஸ் மாநாட்டில் வெளியிட்டுள்ளார். மேலும், இந்த ஸ்மார்ட்போன் 2020-திற்குள் 100 மில்லியன் விற்பனை எண்ணிக்கையை தொடும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்