ஹானர் திருவிழா: ஹானர் போன்களுக்கு பிளிப்கார்ட்டில் 50% தள்ளுபடி! - முழு விவிரம்

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 6 ஏப்ரல் 2019 12:45 IST
ஹைலைட்ஸ்
  • ஏப்.8 முதல் ஏப்.12 வரை ஹானர் காலா திருவிழா நடைபெறுகிறது.
  • அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில் இந்த விற்பனை நடைபெறுகிறது.
  • எந்தெந்த போன்கள் கிடைக்கும் என்ற விவரத்தை பிளிப்கார்ட் வெளியிட்டுள்ளது.

பிளிப்கார்ட் தள்ளுபடி விற்பனையில் ஹானர் 9N ஸ்மார்ட்போனும் இடம்பெற்றுள்ளது.

Honor Gala Festival Sale: ஹானர் காலா திருவிழா அடுத்த வாரத்தில் துவங்குகிறது. இதற்கான ஆன்லைன் விற்பனையானது, ஏப்.8ல் துவங்கி ஏப்.12 வரை நடைபெறுகிறது. இந்த திருவிழா விற்பனையில் ஹானர் போன்கள், டேப்லெட்டுகள், ஸ்மார்ட்வாட்ச் போன்ற அணிகலன்களும் இடம்பெற்றுள்ளன. 

ஹூவாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹானர் இந்த தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது. இந்த 5 நாட்கள் விற்பனையானது அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில் 50 சதவீதம் வரை தள்ளுபடியில் நடைபெற உள்ளது.  இந்த ஹானர் திருவிழாவில் என்னென்ன போன்கள் இடம்பெறுகின்றன என்ற தகவல்களும் தற்போது வெளியாகியுள்ளன. 

ஹானர் காலா திருவிழா குறித்து அதிகார்ப்பூர்மாக வெளியான அறிவிப்பில், ஹானர் தயாரிப்புகளான ஸ்மார்ட்போன், டேப்லெட்ஸ் மற்றும் ஹெட்போன், இயர்போன், ஸ்மார்ட்வாட்ச் போன்ற பொருட்களும் தள்ளுபடியில் இடம்பெறுகின்றன. அந்த வகையில் முன்னணி ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட் எந்தெந்த மாடல்கள் தள்ளுபடியில் கிடைக்கிறது என்ற தகவலையும் வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஹானர் 9N, ஹானர் 9 லைட், ஹானர் 10 லைட் போன்கள் இடம்பெறுகின்றன,  இதேபோல், ஹானர் 7A மற்றும் ஹானர் 7s போன்களும் இடம்பெற்றுள்ளன. சிறந்த அறிவிப்பாக ஹானர் 9i மற்றும் ஹானர் 10 போன்களும் இந்த சிறப்பு தள்ளுபடி விற்பனையில் இடம்பெற்றுள்ளன. 

இதுபோன்ற தள்ளுபடி விற்பனையை ஹானர் நிறுவனம் இந்தியாவில் அறிவிப்பது இது முதல்முறையல்ல, ஏற்கனவே பலமுறை இது போன்ற தள்ளுபடி விற்பனைகளை அறிவித்து வாடிக்கையாளர்களை ஈர்த்து வரும் ஹானர் நிறுவனம், அதே பாணியையே தற்போதும் கடைப்பிடித்து வருகிறது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஆப்பிள் கிட்ட இப்போ 250 கோடி டிவைஸ்கள் இருக்கு! அதுவும் இந்தியா தான் அவங்களோட 'ஃபேவரைட்' இடமாம்
  2. விலை குறைப்புனா இதுதான் விலை குறைப்பு! Samsung Galaxy S24 இப்போ ரூ.31,000 தள்ளுபடியில் அமேசானில் கிடைக்குது
  3. ஒன்பிளஸ் பிரியர்களுக்கு ஜாக்பாட்! 6,000mAh பேட்டரி, ஸ்னாப்டிராகன் 8 Gen 3 சிப்செட் - இப்போ செம மலிவான விலையில்
  4. ரெட்மி-க்கு செம டஃப்! பட்ஜெட் விலையில பிரீமியம் அம்சங்களை அள்ளித் தெளிக்கும் Moto G67 & G77 - நீங்க எதை வாங்குவீங்க?
  5. போனுக்குள்ளேயே ஃபேனா? 7000mAh பேட்டரி வேறயா! பட்ஜெட் விலையில் பிளாக்ஷிப் கேமிங் போன் - REDMAGIC 11 Air வந்தாச்சு
  6. விவோ-வோட அடுத்த அதிரடி! 7,200mAh பேட்டரி, IP69 பாதுகாப்பு - ஆனா இது 5G இல்லையா?
  7. ரெட்மி நோட் 15 ப்ரோ சீரிஸ் வந்தாச்சு! 200MP கேமரா, IP69 ரேட்டிங்-னு மொரட்டுத்தனமா இருக்கு
  8. சார்ஜ் போட மறந்துட்டீங்களா? கவலையே படாதீங்க! 10,001mAh பேட்டரியுடன் Realme P4 Power 5G வந்தாச்சு
  9. நீங்க ஆவலோட வெயிட் பண்ண Find X9s வராதாம்! ஆனா அதைவிட ஒரு பெரிய சர்ப்ரைஸ் காத்திருக்கு
  10. சாம்சங் ரசிகர்களே ரெடியா? Galaxy S26 சீரிஸின் விலை விவரங்கள் இதோ! Ultra மாடல் விலை குறையப்போகுதா?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.