Honor 300 Pro விரைவில் வெண்ணிலா வெர்ஷன் Honor 300 உடன் அறிமுகப்படுத்தப்படும் என தெரியவந்துள்ளது. வெளியீட்டு தேதியை Honor நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஆனால் இந்த செல்போன் பற்றிய சில விவரங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளன. ஹானர் 300 சீரிஸ் 1.5K ரெசல்யூஷன் டிஸ்ப்ளே மற்றும் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடன் வரும் என்று கூறப்படுகிறது. Honor 300 Pro ஆனது Snapdragon 8 Gen 3 சிப்செட்டில் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Honor 300 Pro மற்றும் Honor 300 ஆகியவை முறையே Honor 200 Pro மற்றும் Honor 200 செல்போன் மாடல்களை விட மேம்பட்ட அம்சங்களுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீன சமூக ஊடகமான வெய்போவில் வெளியான தகவல்களை டிப்ஸ்டர் டிஜிட்டல் வெளியிட்டது. வரவிருக்கும் Honor 300 சீரியஸ் செல்போன்கள் 1.5K OLED திரைகளைக் கொண்டிருக்கும். இது முந்தைய மாடல்களில் உள்ள முழு HD+ திரைகளுடன் ஒப்பிடுகையில் நல்ல முன்னேற்றமாகும். அவை Snapdragon 8 Gen 3 SoC சிப்செட் மூலம் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எந்த மாடல் செல்போன் இந்த சிப்செட்டைப் பயன்படுத்தும் என்பதை டிப்ஸ்டர் வெளிப்படையாகக் கூறவில்லை. ஆனால் ப்ரோ மாடல் செல்போன்களில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஹானர் 200 செல்போன் மாடல் ஸ்னாப்டிராகன் 7 ஜெனரல் 3 SoC மூலம் இயக்கப்படுகிறது. அதே நேரத்தில் ஹானர் 200 ப்ரோ ஸ்னாப்டிராகன் 8s ஜெனரல் 3 SoC சிப்செட் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த மாடல்களை போலவே ஹானர் 300 சீரியஸ் செல்போன்கள் 100W வயர்டு சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ப்ரோ மாடல் 50 மெகாபிக்சல் பெரிஸ்கோப் சென்சார் கேமராவை கொண்டிருக்கும் என தெரிகிறது. இதில் பாதுகாப்புக்காக அல்ட்ராசோனிக் கைரேகை ஸ்கேனர் இருப்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று டிப்ஸ்டர் வெளியிட்ட தகவல் மூலம் தெரியவருகிறது.
ஹானர் 200 மற்றும் ஹானர் 200 ப்ரோ இந்த ஆண்டு மே மாதம் சீனாவில் வெளியிடப்பட்டது. ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது ஆரம்ப விலையாக ஹானர் 200 செல்போன் மாடல் 34,999 ரூபாய் மற்றும் Honor 200 Pro மாடல் 57,999 ரூபாய் என்கிற அளவில் அறிமுகம் ஆனது. இவை 50 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமராக்கள் மற்றும் 50 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டர் கேமராவை கொண்டுள்ளன. ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான MagicOS 8.0 மூலம் இயங்குகின்றன. 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான சப்போர்ட் உடன் 5,200mAh பேட்டரியைக் கொண்டுள்ளன. Honor 200 ஆனது 6.7-inch full-HD+ OLED வளைந்த காட்சியைக் கொண்டுள்ளது. அதே சமயம் Honor 200 Pro சற்று பெரிய 6.78-inch திரையைக் கொண்டுள்ளது. வெண்ணிலா மாடல் ஸ்னாப்டிராகன் 7 ஜெனரல் 3 SoC சிப்செட் மூலம் இயங்குகிறது. அதே சமயம் ப்ரோ வேரியண்டில் ஸ்னாப்டிராகன் 8s ஜெனரல் 3 சிப்செட் உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்