ஹவாய் துணை பிராண்டிலிருந்து மூன்று போன்கள் அறிமுகம் - ஹானர் 30, ஹானர் 30 ப்ரோ மற்றும் ஹானர் 30 ப்ரோ +. இந்த ஸ்மார்ட்போன்கள் ஏப்ரல் 21 முதல் சீனாவில் விற்பனைக்கு வரும். போன்களின் விலை மற்றும் விவரங்கள் பின்வருமாறு:
போனின் 6 ஜிபி + 128 ஜிபி மாடலின் விலை சிஎன்ஒய் 2,999 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.32,400),
8 ஜிபி + 128 ஜிபி மாடலின் விலை சிஎன்ஒய் 3,199 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.34,600) மற்றும்
8 ஜிபி + 256 ஜிபி வேரியண்ட்டின் விலை சிஎன்ஒய் 3,499 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.37,800) ஆகும்.
போனின் 8 ஜிபி + 128 ஜிபி மாடலின் விலை சிஎன்ஒய் 3,999 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.43,200) மற்றும்
8 ஜிபி + 256 ஜிபி வேரியண்டின் விலை சிஎன்ஒய் 4,399 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.47,600) ஆகும்.
போனின் 8 ஜிபி + 256 ஜிபி மாடலின் விலை சிஎன்ஒய் 4,999 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.54,100) மற்றும்
12 ஜிபி + 256 ஜிபி ஆப்ஷனின் விலை சிஎன்ஒய் 5,499 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.59,500) ஆகும்.
இந்த மூன்று ஹானர் போன்களும் Magic Night Black, Wizard of Oz, Titanium Empty Silver மற்றும் Neon Purple கலர் ஆப்ஷன்களில் வருகிறது. இந்த போன்கள் ஏப்ரல் 21-ஆம் தேதி சீனாவில் விற்பனைக்கு வரும். ஆனால், இந்திய வெளியீடு குறித்து எந்த தகவலும் இல்லை.
ஹானர் 30, 6.53 இன்ச் முழு எச்டி + (1,080x2,400 பிக்சல்கள்) ஹோல்-பஞ்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது, மேஜிக் யுஐ 3.1.1-ல் இயங்குகிறது. இந்த போன், கிரின் 985 SoC-யால் இயக்கப்படுகிறது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரை ஆன்போர்டு ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது.
போனின் குவாட் கேமரா அமைப்பில், 40 மெகாபிக்சல் பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா, 8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா ஆகியவை அடங்கும். முன்பக்கத்தில், 32 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது. ஹானர் 30, 40W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது.
ஹானர் 30 ப்ரோ, 6.57 இன்ச் முழு எச்டி + (1,080x2,340 பிக்சல்கள்) டூயல் துளை-பஞ்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த போன் கிரின் 990 SoC-யால் இயக்கப்படுகிறது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
போனின் பின்புற டிரிபிள் கேமரா அமைப்பில், 40 மெகாபிக்சல் சூப்பர் சென்சிட்டிவ் கேமரா, 16 மெகாபிக்சல் சூப்பர் வைட்-ஆங்கிள் கேமரா, மற்றும் 8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா ஆகியவை அடங்கும். போனின் டூயல் செல்பி கேமரா அமைப்பில், 32 மெகாபிக்சல் செல்பி கேமராவும், 8 மெகாபிக்சல் செல்பி கேமராவும் உள்ளன. மற்ற அனைத்து விவரங்களும் ஹானர் 30 போனுடன் இணையானவை.
ஹானர் 30 ப்ரோ +, 6.57 இன்ச் ஃபுல்-எச்டி + (1,080x2,340 பிக்சல்கள்) டூயல் ஹோல்-பஞ்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது, 12 ஜிபி ரேம் வரை பேக் செய்கிறது.
ஹானர் 30 ப்ரோவைப் போல மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதன் பிரதான கேமராவில் 50 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 700 சென்சார் உள்ளது. இந்த போன், 40W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 27 வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்கையும் வழங்குகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்