4 கேமராக்களுடன் வெளியாகியுள்ள "ஹானர் 20 Pro": விலை உள்ளே!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 22 மே 2019 13:08 IST
ஹைலைட்ஸ்
  • கருப்பு மற்றும் நீலம் என இரு வண்ணங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகிறது
  • 48 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா
  • 8 மெகாபிக்சல் கேமரா, 30x டிஜிட்டல் ஜூம் செய்து கொள்ளலாம்.

ஜூன் 11-ஆம் தேதி அறிமுகமாகவுள்ள ஹானர் 20 போன்கள்.

ஹானர் நிறுவனம், செவ்வாய்க்கிழமை அன்று, ஹானர் 20 தொடரில் மூன்று ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்தது. லண்டனில் நடந்த நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போன்களில், மிகுந்த பிரீமியம் போன் ஹானர் 20 Pro. இந்த ஸ்மார்ட்போன் மொத்தம் 4 பின்புற கேமராக்கள் கொண்டு வெளியாகவுள்ளது. அதுமட்டுமின்றி, 32 மெகாபிக்சல் முன்புற கேமராவையும் கொண்டுள்ளது. 6.26 இன்ச் திரை கொண்ட இந்த ஸ்மார்ட்போன், 4000mAh பேட்டரி அளவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கிரின் 980 ப்ராசஸரை கொண்டுள்ளது. இந்த நிகழ்வில் ஹானர் 20 மற்றும் ஹானர் 20 லைட் என மேலும் இரண்டு ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. 

ஹானர் 20 Pro: விலை

ஹானர் 20 Pro-வின் துவக்க விலை 599 யூரோக்கள். இதன் இந்திய மதிப்பு சுமார் 46,500 ரூபாய். இந்தியாவில் ஜூன் 11 அன்று இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஃப்ளிப்கார்ட்டில் விற்பனைக்கு வரவுள்ளது. கருப்பு (Phantom Black) மற்றும் நீலம் (Phantom Blue) என இரு வண்ணங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகும்.

ஹானர் 20 Pro: சிறப்பம்சங்கள்!

6.26 இன்ச் FHD+ (1080x2340 பிக்சல்கள்) கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் பை அமைப்பை கொண்டு செயல்படுகிறது. ஹோல்-பன்ச் திரை(Hole-Punch Display) கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் திரைக்கும் உடலுக்கும் உள்ள விகிதம் 91.7 சதவிகிதம். இந்த ஸ்மார்ட்போன் 7nm கிரின் 980 (Kirin 980) ப்ராசஸரை கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்போனின் பின்புறத்தில் மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. முதலில், 48 மெகாப்க்சல் அளவிலான முதன்மை கேமரா. வைட் ஆங்கிள் கேமராவாக 16 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, இதில் 117 டிகிரி வரை விரிந்த படங்களை எடுக்கலாம். 8 மெகாபிக்சல் அளவிலான தொலைதூரப்படங்களை எடுக்கும் கேமரா உள்ளது. இதில் 3x ஆப்டிகல் ஜூம், 5x ஹைபிரிட் ஜூம், மற்றும் 30x டிஜிட்டல் ஜூம் செய்து கொள்ளலாம். நான்காவதாக, 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 

ஹோல்-பன்ச் திரை கொண்ட இதன் முன்புறத்தில் 32 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

4000mAh பேட்டரி கொண்ட இந்த ஸ்மார்ட்போனிற்கு 22.5W சார்ஜர் வழங்கப்படவுள்ளது. இதில் 30 நிமிடங்கள் சார்ஜ் செய்தாலே 50 சதவிகிதம் பேட்டரி நிரம்பிவிடும். 4G வசதி, வை-பை, ப்ளூடூத் v5 வசதி உள்ளது. 154.60x73.97x8.44mm என்ற அளவுகளை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 182 கிராம் எடை உள்ளது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Honor 20 Pro, Honor 20 Pro PRice, Honor 20 Pro Specifications, Honor
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஜேபிஎல் லைவ் 780என்சி விமர்சனம்: ஒரு முழுமையான தொகுப்பா?
  2. ஆகஸ்ட் 11 வெளியீட்டிற்கு முன்னதாக ரெட்மி K100 ப்ரோ மேக்ஸின் முக்கிய விவரக்குறிப்புகள், அம்சங்கள் கசிந்துள்ளன
  3. ஃபிளிப்கார்ட் ஃப்ரீடம் சேல்: நத்திங் ஃபோன் 4a சீரிஸ், ரெனோ 15 சீரிஸ், மேலும் பல தள்ளுபடியில் வழங்கப்படும்
  4. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல்: சியோமி பேட் 7, ஒன்பிளஸ் பேட் 2, ரெட்மி பேட் 2 மற்றும் பலவற்றில் சிறந்த சலுகைகள்
  5. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல் 2026: ரூ. 40,000-க்கு கீழ் சிறந்த ஸ்மார்ட்போன் சலுகைகள் அறிவிப்பு
  6. சோனி WH-1000XM6 இப்போது இந்தியாவில் ஆலிவ் கிரே வண்ணத்தில் கிடைக்கிறது: விலை, கிடைக்கும் இடம், அம்சங்கள்
  7. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல்: நீங்கள் தவறவிடக்கூடாத ஒன்பிளஸ் 15 சலுகை இது
  8. அமேசான் கிரேட் ஃபிரீடம் சேல் 2026: ரூ. 20,000-க்குள் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன் சலுகைகள்!
  9. ரியல்மி 16x 5G பற்றிய தொகுப்பு: வெளியீட்டுத் தேதி, இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் விவரக்குறிப்புகள்
  10. Poco M8 Power vs OnePlus Nord CE 6 Lite vs Moto G77 Power: இந்தியாவில் விலை, சிறப்பம்சங்கள் ஒப்பீடு!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.